பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

வை. சு. சண்முகனார் 87

'ஈரமிலா நெஞ்சுடையார் நின்னைக் காணின் அருள் வடிவமாகி நிற்பர்' எனவும் 'நேரறியா மக்களெலாம் நின்னைக் காணின் நீதி நெறியில் நிற்பர் எனவும் கூறுவதால் சண்முகனார் அருளுள்ளமும் கண்டிப்பும் கட்டுப்பாடும் உடையவர் என்பது புலனாகிறது. இவ்வியல்புகள் உடையார் என்பது அவருடன் பழகியவர்களுக்கு நன்கு தெரியும். தம் மக்களை, பேரன் பேர்த்திகளை இவ்வாறே வளர்த்தார்.'

"யாரறிவார் நின்பெருமை? யாரதனை மொழியினிடை அமைக்க வல்லார்?"

என ஏக்கப் பெருமூச்சு விடுகிறார் பாரதி. இதோ, அவர் ஏக்கம் நீக்கப்படுகிறது; அவர் ஆவல் நிறைவேறுகிறது. ஆம், சண்முகனார் பெருமை உலகத்தால் அறியப்படுகிறது; அப் பெருமை 'மொழி யினிடை அமைக்க' வும் படுகிறது.

'மன்னர் புகழ் பாடினோம்; செல்வர் பெருமை செப்பினோம்; அதனால் எய்ப்புற்றோம்; மனங் கசந்தோம்; அதனால் மனிதரை இனிப்பாடோம் வானவரையே வாயாரப் பாடுவோம்' என்று உறுதி பூண்டிருந்த பாரதியார், மனிதராகிய சண்முகனாரை ஏன் பாடினார்? 'உன்னிடத்தே இமையோர்க்குள்ள வன்னமெலாங் கண்டோம்; நின்னைப் பாடிப் புகழ்ந்தோம்; மனம் மகிழ்ந்தோம்' என்று அவரே காரணமும் கூறி விடுகிறார்.

சண்முகனார் வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த காரணத் தால், பாரதியார் விழிகளுக்கு, வானுறையுந் தெய்வமாகத் தோன்றியிருக் கிறார். உயரிய பண்பாடுகளின் உறைவிடமாகி, உதவும் உள்ளங் கொண்ட