பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/121

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ்.எம்.கமால் ⚫ 101


உள்ளனர். பெரிய உடையாத் தேவரையும் விசைய ரெகுநாத தேவரது மனைவியையும், மிகவும் கொடுரமான முறையில் சிறை வைத்து இருப்பதுடன் அவர்களுக்கு தேவையானவற்றைக் கூட கொடுக்காததால் அவர்கள் ஓடிவந்து சிவகங்கை கோட்டைக்குள் பாதுகாப்பிற்காக புகுந்து கொண்டுள்ளனர். அவர்களைத் தங்களிடம் ஒப்படைக்கும்படியும் தவறினால், அவர்களை வன்முறையில் விடுவித்துச் செல்வதாக பயமுறுத்தி இருக்கின்றனர்.
"இதனைப் போன்றே. முன்னர் ஒருமுறை மன்னரது உறவினர் ஒருவர். சின்ன மருதுவின் அடாவடிக்கு அஞ்சி மதுரைச் சீமைக்கு ஓடினார். ஆனால் சின்ன மருது அவரைப் பிடித்து வருமாறு செய்து அவரைக் கொன்று போட்டார். இப்பொழுது அதே சூழ்ச்சியை. அந்தப் பாளையக்காரர் மற்றும் அந்தப் பெண்மணி மீதும் கையாண்டுள்ளார். சின்ன மருதுவின் இந்த முரட்டுச் செயல்கள் சர்க்காரது தெற்கு மாவட்டங்களில் மிகுந்த குழப்பத்தையும், இடைஞ்சலையும், வரி வசூலில் எனக்கு இழப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இதனால் கும்பெனியாருக்குச் செலுத்தவேண்டிய தவணைத் தொகைக்கு நான் இரவும் பகலும் மிகவும் சிரமப்படுகிறேன்.
"ஆதலால், இரண்டு மூன்று படை அணிகளை அனுப்பி கட்டுக்கடங்காத அந்த மனிதனைத் தண்டித்து சிவகங்கைச்சீமை, அதன் முந்தைய இயல்பு நிலைக்கு கொண்டுவந்து சாந்தியையும் சமாதானத்தையும் ஏற்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்."

நவாப்பின் கடிதத்தில் கண்டுள்ள புகார்களைப் போன்று இராமநாதபுரம் சேதுபதி மன்னருடைய கடிதம் ஒன்றிலும் கும்பெனி கவர்னருக்கு தெரிவிக்கப்பட்டு இருந்தது. இராமநாதபுரம் சீமைப் பகுதிகளை சிவகங்கைப் பிரதானி தாக்கி இருப்பது, சேதுபதி மன்னரது உறவினர்களான சிவகங்கை மன்னரையும், ராணியாரையும் சிறையில் வைத்து இம்சிப்பது என்பவைகளைப் பிராதானமாக குறிப்பிட்டு, இத்தகைய கொடுமைகளைக் களைவதற்கு இராமநாதபுரம் மறப்படைகள், கும்பெனியாருக்கு உதவக் காத்து இருப்பதாகவும் சேதுபதி மன்னர் குறிப்பிட்டு இருந்தார்.[1] இந்தக்கடிதங்கள்தொடர்பாக, கும்பெனியாரும் நவாப் முகம்மது அலியும் தங்கள் படைகளைச் சிவகங்கைக்கு அனுப்ப ஆயத்தம் செய்தனர். நவாப்பின் பிரதிநிதிகளான மீர்முத்தபர்கான், ஹூசைன்கான் மற்றும் கர்னல் மார்டின், புதுக்கோட்டைத் தொண்டமான், இராமநாதபுரம் மறவர்கள் ஆகியோரது


  1. Military Consultations Vol. 12841 5.2.1789. P. 785–786