பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ்.எம்.கமால் ⚫ 107

ராணி வேலு நாச்சியாரின் அறக்கொடைகள்[1]

கி.பி.
1780
குளமங்கலம் மாலையீட்டுமடம், காளையார் கோவில் குரு பூஜைக்கு, இராமலிங்க பண்டாராம்.
1782 எஸ்.வரிச்சூர் பிறவி ஏந்தல் பாபுராவ் தர்மாசனம் அண்ணாமலை ஐயர், தர்மாசனம்.

(ராணி வெள்ளச்சி நாச்சியார் என்ற குழந்தை நாச்சியார் பெயரில்)

1781 குளக்கடை (மங்கலம் வட்டம்) ஊழியமானியம்.
1782 காக்குளம். மடப்புரம், ஊழியமானியம்
கல்லூரணி ராஜேந்திர சோளீஸ்வரர் ஆலயம், இளையான்குடி.
மடப்புரம் ஊழியமானியம்
1782 இடையன் சருகனி வேதாந்தம் ஐயங்கார், வரத ஐயங்கார்.
பைக்குடிப்பட்டி ஊழியமானியம்
பனைக்குளம் தண்ணிர்ப் பந்தல் தர்மாசனம்.
முள்ளிக்குடி சூடியூர் சத்திரம்.
எட்டிக்குடி தர்மாசனம்.
நாவற்கினியானியான் (ஏந்தல்) பெத்த பெருமாள் பண்டார மடம்.
பிச்சைவயல், குடிகாத்தவயல் மார்க்கண்டேசுவரர் கோயில், கீழப்பூங்குடி.
நம்பி ஏந்தல் ஊழியமான்யம்.
நெடுங்குளம் (பார்த்திபனூர் வட்டம்) தர்மாசனம்.


சமுதாய மேம்பாடு, விழிப்புணர்வு பற்றிய சிந்தனைகள் உறுதி பெறாத பதினெட்டாம் நூற்றாண்டுத் தமிழகத்தில், அரச குலத்தில் பிறந்த இந்த மறப்பெண், மிகுந்த துணிச்சலுடன் இதிகாச புராண கால பெண்மணிகளுக்கு இணையாக மன உறுதியுடன் பதினெட்டு ஆண்டுகள், அரசியலைத் திறம்பட நடத்தி எதிர்கால பெண்ணினத்திற்கு பெருமைதரும் முன்னோடியாக விளங்கியுள்ளார். ஆதலால் ராணி வேலு நாச்சியார் தமிழக வரலாற்றில் தனித்த சிறப்பினைப் பெற்றுள்ளார் என்பதில் ஐயமில்லை.

இந்திய விடுதலை இயக்கத்தின் விடிவெள்ளியாக விளங்கும் இந்த வீர மங்கை பற்றிய விரிவான ஆய்வுகள் வரலாற்றிற்கு மிகவும் இன்றியமையாதனவாக உள்ளன.


  1. சிவகங்கை சமஸ்தானம் பதிவேடுகள்.