பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ்.எம்.கமால் ⚫ 123

வீரத்தின் விளை நிலம் மானத்தின் மரபு போற்றும் சின்ன மறவரது சிவகங்கைச் சீமை மக்களும் மன்னரும் எந்த அணியில்? மக்கள் அணியிலா? பரங்கியரது கைக்கூலிகள் அணியிலா?

கும்பெனியாரை எதிர்த்து

கடந்த ஐந்து ஆண்டுகளில், கும்பெனித் தளபதிகளும் அலுவலர்களும் தம்முடன் கொண்டு இருந்த தொடர்பை சில மணித்துளிகள் நினைவு படுத்தி பார்த்தார் சிவகங்கைப் பிரதானி. அவர்கள் கொண்டு இருந்த நேயம், நகமுக நட்பு என்பதைப் பல நிகழ்ச்சிகளும் அனுபவங்களும் அறிவுறுத்தின. என்ன இருந்தாலும் அவர்கள் அந்நியர்கள்தானே என்ற ஆறுதல். இந்த மண்ணின் மாண்பை அறியாதவர்கள். இந்த மண்ணின் மைந்தர்களை மதிக்கும் மனப்பக்குவம் இல்லாதவர்கள். இதனால் தான் இந்த நாட்டின் குடிதழீஇ கோலோச்சிய மன்னர்களையே மமதையுடன் நடத்தி வந்துள்ளனர். குறிப்பாக, பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரர் கட்ட பொம்மனை அவர்கள் நடத்தியவிதம், சிவகங்கைச் சீமை காடுகளில் தஞ்சம் புகுந்தவர். தவறுதலாக தொண்டமான் சீமை எல்லைக்குள் சென்றவரைப் பிடித்து, தூக்கில் ஏற்றிய துயர சம்பவம் - சிவகங்கைப் பிரதானியின் இதயத்தைத் துளைத்து வந்தது.

இன்னும் திண்டுக்கல் சீமை, கொங்குநாடு, வயநாடு, கன்னடநாடு ஆகியவைகளில் இருந்து கிடைத்துள்ள செய்திகளும் கும்பெனியாரது கொடுமைகளுக்கு மகுடமாகவல்லவோ இருக்கின்றன[1] இனியும் கும்பெனியாருடன் நேச முறையில் நடந்து கொள்வது அவர்களது அக்கிரமங்களுக்கு உடந்தையாகிவிடும். அவர்களது அதிகாரப்பிடிப்பை எங்ங்னம் அகற்றுவது? அதற்கான வழிமுறைகள் இவைகள் பற்றிய சிந்தனைகள் தொடர்ந்தன. இதற்கிடையே விருபாட்சி பாளையக்காரர் கோபாலநாயக்கர் தொடர்பு ஏற்பட்டது.[2] மறவர் சீமையில் கும்பெனியாருக்கு எதிராக ஆயுதப்புரட்சியை ஏற்பாடு செய்த சித்திரங்குடி மயிலப்பனது நேரடியான அறிமுகமும் சிவகங்கை பிரதானிகளுக்கு கிடைத்தது.[3] கும்பெனியாரது எதிர்ப்பு அணியின் தளமாக சிவகங்கை மாறியது. தென்னாட்டு கிளர்ச்சிக்காரர்கள் அனைவரும் திண்டுக்கல் கோட்டையில் ரகசியமாகக் கூடி கும்பெனியாருக்கு எதிரான அணியொன்றை அமைத்தனர். இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு திரும்பிய சின்ன மருது சேர்வைக்காரர் பற்றிய இரகசியத் தகவல்களும் கலெக்டர் லூஷிங்டனுக்கு


  1. கமால்.எஸ்.எம். Dr. மாவீரர் மருதுபாண்டியர் (1989) பக்: 40-41
  2. Military Consultations - Vol.290
  3. Selection from the History of Tamil Nadu (1978) P: 228