பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

194 ⚫ சீர்மிகு சிவகங்கைச் சீமை


நிரப்பினர். தேசிய இயக்கத்தில் பங்கு கொண்டதற்காக ஓராண்டு சிறைத் தண்டனை பெற்றமுதல் நகரத்தார் என்ற பெருமை அமராவதி புதுரர் ராய.சொக்கலிங்கன்அவர்களுக்கு 9.9.1932-ம் தேதி கிடைத்தது. இதனைப் போன்றே, அந்நியத் துணிமறுப்பு, இயக்கத்தில் சிறப்பான பங்கு கொண்ட பெருமை, திருப்புத்துார் முஸ்லிம் பெருமக்களைச்சாரும். திருப்புத்துர் மற்றும் காரைக்குடி ஆகிய ஊர்களில் அந்நிய நாட்டுத் துணிகளை விற்பனை செய்யும் துணிக்கடைகள் இல்லாததால், திருப்புத்தூர் முஸ்லிம்கள், ஒருகுழுவாக மதுரைக்கு சென்று அங்குள்ள பெரிய ஜவுளி நிறுவனமான ஹாஜி. மூஸா.சேட் ஜவுளி கடை முன்னர் மறியல் நடத்தினர். சிவகங்கை நீதிமன்றத்தில் பணிபுரிந்த நான்கு அலுவலர்கள் தங்களது பணிகளை துறந்து அலுவலகத்தை விட்டு வெளியே வந்தனர்.

சிவகங்கை, காரைக்குடி, இளையான்குடி, புதுவயல் ஆகிய ஊர்களில் உள்ள கள்ளுக்கடை, சாராயக்கடை வாயில்களில் நின்று தேசியத் தொண்டர்கள் மறியல் செய்தனர். மதுவினை வாங்கி அருந்த வேண்டாம் என குடிகாரர்களைக் கேட்டுக் கொண்டனர். ஆனால் காவல்துறையினர் தொண்டர்களை நையப்புடைத்ததுடன் சிறைகளில் தள்ளி அடைத்தனர். இந்த அகிம்சா போராட்டம் பொதுமக்களிடத்தில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்தக் கள்ளுக்கடை மறியல் போரில் கே.வி.சேதுராமச்சந்திரன், கே.சுந்தரராஜன், கே.இராமசாமி, பி.சுப்பிரமணி, அ.சதாசிவம், மு.மாணிக்கம், இ.இபுராகிம், எஸ்.இபுராகிம் கனி, முகைதீன் பாய், பாவலர் மூக்கையா, தொண்டர் நடராஜன், சே.சுப்பராமன், வக்கீல் இராமனுஜம் ஐயங்கார், எம்.எஸ்.ஆர்.சுப்பிரமணியம் பில்லுர் சித்தாண்டி உடையநாதபுரம் மருதப்பக் கோனார், கணபதி சேர்வை ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதற்கிடையில் காந்தியடிகள் கி.பி.1934-ல் சிவகங்கைப் பகுதிக்குச் சுற்றுப் பயணமாக வந்தார். பாகனேரி ஆர்.வி.சுவாமிநாதன் அவர்களது விருந்தாளியாக பாகனேரியில் தங்கினார். சிவகங்கையில் கோகலே மன்றம், அருகில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசினார். அப்பொழுது அவர் மீது வீசப்பட்ட சிறிய கல் ஒன்றினை ரூ.225/-க்கு மாணிக்கம் சேர்வை என்ற ஒரு தேசபக்தர் ஏலத்திற்கு எடுத்தார். அடுத்து, ஏழை மாணவர் இலவச விடுதியினை சிவகங்கையில் நடத்தி வருவதுடன் அதில் அரிசன மாணவர்களையும் சேர்த்து உதவி வருகின்ற சிவகங்கை ஜமீன்தார் துரைசிங்க ராஜா அவர்களையும், அரிசனங்களுக்கு தொண்டு செய்து வரும் நாகு ஆசாரி என்பவரையும் காந்தியடிகள் பாராட்டினார். இளையான்குடி பகுதி மக்கள் காந்தியடிகளது கிராம நிர்மானத் திட்டங்களில் மிகுந்த ஈடுபாடு கொண்டனர். கருசா. காதர்பாட்சா ராவுத்தர் என்பவர் 233 கிராமங்களில் கிராமக் காங்கிரஸ் கிளைகளை ஏற்படுத்தியதுடன், பெண்கள் கதர் நூற்புத் திட்டத்தை பெருமளவில்