பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ்.எம்.கமால் ⚫ 221


வெள்ளச்சி பற்றிய குறிப்பும் அந்த இலக்கியங்களில் காணப்படவில்லை. "ராணியார் விருப்பாட்சி செல்லும் பொழுது (கி.பி.1772)ல் கர்ப்பிணியாக இருந்தார். வெள்ளச்சி அப்பொழுது பிறக்கவில்லை என்ற பேருண்மை எந்த அடிப்படையில் எழுந்தது என்று இந்த ஆசிரியர் குறிப்பிடப்படவில்லை.

இன்னொரு நகைப்புக்குரிய விஷயம். 3.6.1772-ல் இராமநாதபுரம் கோட்டையைப் பிடித்த கும்பெனியார் நவாப்பினது படைகள், சிவகங்கை நோக்கி வருவதை ஒற்றர்கள் மூலம் அறிந்த மன்னர் முத்து வடுகநாதர் அவர்களது படையெடுப்பைச் சமாளிப்பதற்கு காளையார் கோவில் காட்டரண்தான் பொருத்தமானது என முடிவு செய்து 20.6.1772-க்கு முன்னதாக அவர் எதிர்த்தாக்குதல் ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டிருந்தார். 21.6.1772-ம் தேதியன்று சிவகங்கையை பிடித்தப் பிறகு கும்பெனியார் இரு அணிகளாக கொல்லங்குடி வழியாகவும், சோழபுரம் வழியாகவும் கிழக்கே காளையார் கோவில் நோக்கி புறப்பட்டனர் என்பது தான் வரலாறு. ஆனால், மன்னர் காளையார் கோவில் காட்டில் வேட்டைக்காக சென்றதாகவும் அப்பொழுது திடீரென கும்பெனிப் படைகள் அங்கு மங்கலம் வழியாக வந்தது என்று அம்மானைப் பாடுகிறது எவ்வளவு முரண்பாடு?

மன்னர் முத்து வடுகநாதர் இந்தப் போரில் சிந்திய செங்குருதியால் சிவந்த மண்ணின் மாண்பை மன்னரது தியாகத்தை, மக்களது மனத்தினின்றும் அகற்றுவதற்காகத் திட்டமிட்டு தொடுக்கப்பட்ட புரட்டு அம்மானையின் வரிகள் என்பதைத்தான் உணர முடிகிறது. அதனை இந்த நூலாசிரியரும் வழிமொழிந்துள்ளார்.

பக்கம் 92-93

“கர்ப்பிணியான வேலு நாச்சியாரைக் காப்பாற்றுவதே மருதிருவரின் தலையாய கடமையாயிற்று.
அத்துடன் மன்னர் முத்து வடுகநாதருக்கு ஆண் வாரிசு இல்லாததால். அவரால் வளர்க்கப்பட்டு வந்த வெங்கண் உடையனனையும் கண் போல காக்க வேண்டிய கடமை வேறு. விருபாட்சி பாளையக்காரர் ஆங்கில ஆதிக்க எதிர்ப்பாளர். எனவே மருது பாண்டியர்கள் அரசியை அங்கு அழைத்துச் செல்வது சிறந்து எனக் கருதி அங்கு கொண்டு சேர்ந்தனர்.”

கர்ப்பிணியான வேலு நாச்சியார் என்று எவ்வித ஆதாரமும் இல்லாமல் குறிப்பிட்டது போல இங்கும் இரு செய்திகள் எவ்வித ஆதாரமில்லாது குறிப்பிடப்படுகின்றன. சிவகங்கைச் சரித்திரக் கும்மியும் அம்மானையும், மருதிருவர் ராணி வேலுநாச்சியாரை மேலுர் வழியாக திண்டுக்கல் விருபாட்சிக்கு அழைத்துச் சென்றார்கள் என்பது ஒன்று. ஜூன்