பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ்.எம்.கமால் ⚫ 225


கொடுக்கப்பட்டுள்ளது.) இதில் கண்டுள்ள வாசகத்தின்படி பிரதானி தாண்டவராய பிள்ளையின் தகப்பனார் காத்தவராயபிள்ளை நாலுகோட்டை பெரிய உடையாத் தேவரது பணியில் இருந்தவர் என்பதும், அவரது பணியின் தொடர்பாக அரசு நிலையிட்ட சசிவர்ணப் பெரிய உடையாத் தேவர் தாண்டவராய பிள்ளையை கி.பி.1747-ல் தமது அரசுப் பணியில் நியமனம் செய்தார் என்பதும் அந்தச் செப்பேட்டில் இடம் பெற்றுள்ளது.

இத்தகைய உண்மைச் செய்தியும் ஆவணமும் இலக்கியச் சான்றும் முல்லையூர் தாண்டவராய பிள்ளையைப் பற்றிய செய்திகளைத் தரும்பொழுது அம்மானை ஆசிரியரது பாடல் வரிகள் உண்மைக்கு புறம்பான கற்பனை என்பதும் அதனை மருது பாண்டிய மன்னர் நூலாசிரியர் வேலிக்கு ஒணான் சாட்சி என வழிமொழிந்து வரைந்து இருப்பது சரித்திரப் புரட்டு என்பதைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்? அத்துடன் இந்த பொய்யான செய்தி பாண்டியன் தன் மகனைச் சோழனுக்கு திருமணம் செய்து தனது அவைப் புலவர் புகழேந்தியையும் சோழநாட்டிற்கு அனுப்பி வைத்தார் என்ற பாட்டி கதையையும் நினைவூட்டுவதாக உள்ளது.

பக்கம் 138

'...தனக்கு கிட்டவேண்டிய ஆட்சியைக் கூட நாட்டு நலன் கருதி மருது பாண்டியர்களுக்கு விட்டுக் கொடுத்தார். (வேங்கண் பெரிய உடையார்)

நூலாசிரியர் இவ்விதம் குறிப்பிட்டிருப்பது அவர் நூலில் முன்னே குறிப்பிட்டிருப்பதற்கு முரணாக இந்த வாசகம் அமைந்துள்ளது. 1780 ஜூலை மாதத்தில் சிவகங்கையை மீட்ட சில நாட்களில் ராணி வேலுநாச்சியார் அவர்கள் தமது ஆட்சியை, சிவகங்கைச் சீமையை மருதிருவரிடம் ஒப்படைத்து விட்டார் என்று வரைந்துள்ளார். (பார்க்க: மருது பாண்டியர் மன்னர், பக்கம் 120/293) அடுத்து, பக்கம் 286-ல் "புல்லர்டன் தன் படையெடுப்பின் பொழுது அவர்கள் ராஜாக்களாக விளங்கியதைக் கண்டு எழுதியதை குறிப்பிட்டு இருக்கிறார். (ஒரு நாட்டிற்கு ராஜா என்று ஒருவர்தானே ஒரு சமயத்தில் இருக்க முடியும் என்று வாசகர்கள் கேட்டு விடாதீர்கள்.)

மற்றும், பெரிய மருது சேர்வைக்காரர் ராணி வேலு நாச்சியாரை மறுமணம் செய்து கொண்டதன் மூலம் (பார்க்க: மருது பாண்டியர் மன்னர் பக்கம்: 116-120) சிவகங்கைத் தன்னரசின் மகுடம் சூடிய மன்னர் ஆகி விட்ட்னர் என்றும் குறிப்பிட்டுள்ளார். இவை எல்லாம் நிகழ்ந்தது கி.பி.1780-ல். இவ்விதம் இறையாண்மை பெற்ற 'அந்த மன்னர்களுக்கு" வேங்கன் பெரிய உடையாத் தேவர் கி.பி.1783-ல் ராணி வேலுநாச்சியாரது