பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

226 ⚫ சீர்மிகு சிவகங்கைச் சீமை


மகள் வெள்ளச்சியை மணந்தவருக்கு, ஆட்சியுரிமை எப்படி ஏற்பட்டது? அவர் எப்படி அதனை ஏன்விட்டுக் கொடுத்தார்? முரண்பாடாக அல்லவா ஆசிரியர் கூற்று அமைந்துள்ளது. ஏன் இந்த குழப்பம்?

முழுப் பூசுணிக்காயை ஒரு தட்டுச்சோற்றில் அமுக்கி மறைப்பது என்றால் இயலாத காரியம்தான். அப்பொழுது குழப்பமும் மயக்கமும் ஏற்படுவது இயல்பு. கி.பி.1780 ஜூலை மாதம் முதல் கி.பி.1789 நவம்பர் வரை ராணி வேலு நாச்சியார் சிவகங்கையின் ராணியாகவும் கி.பி.1789 டிசம்பர் முதல் கி.பி.1801 செப்டம்பர் வரை சக்கந்தி வேங்கன் பெரிய உடையாத் தேவர் சிவகங்கை மன்னராகவும் இருந்தனர் என்பதற்கான ஆவணங்கள் சிவகங்கை தேவஸ்தானத்திலும், சென்னை தமிழ்நாடு அரசு ஆவணக் காப்பகத்திலும் ஏராளமாக இருக்கும் பொழுது, இவைகளையெல்லாம் மறைத்து ஒரு புதிய சரித்திரப் புரட்டை நிலை நிறுத்துவது எளிதான செயல் அல்லவே!

இவ்விதம் சக்கந்தி உடையாத் தேவரவர்கள் சிவகங்கையின் இளவரசி வெள்ளச்சி நாச்சியாரை மணந்து கி.பி.1790-1801 வரை சிவகங்கை மன்னராக இருந்த பாவத்திற்காகத்தானே அவரை, கும்பெனியார் விட்டு வைக்கவில்லை. மலேஷியத் தீபகற்பத்தில் உள்ள பினாங் தீவிற்கு நாடு கடத்தி அங்கேயே 19.9.1802-ல் மரணமடையும் துர்பாக்கிய நிலையை அவருக்கு ஏற்படுத்தினர். மேலும் வேங்கண் பெரிய உடையாத் தேவர் சிவகங்கை மன்னராக இருந்த காரணத்தினால் தானே, வெள்ளச்சி நாச்சியார் கி.பி. 1793-ல் இறந்த பிறகு பிரதானி பெரிய மருது சேர்வைக்காரர் தமது மகளை வேங்கன் பெரிய உடையாத் தேவருக்கு இரண்டாவது தாரமாக மணம் செய்து வைத்தார். இந்தச் செய்தி இந்த நூலில் குறிப்பிடப் படாமல் விடுபட்டு இருப்பது இத்தகையதொரு உள்நோக்கம் கொண்டது போலும்.

பக்கம் 151

'... வேங்கன் பெரிய உடையாத் தேவரை அரசராக்குவதென்றும், மூன்று லட்சம் ரூபாய் பேஷ்குஷ் தொகையென்றும். மருதிருவர் அமைச்சர்களாக இருப்பர் என்றும் அந்த சமரச உடன்பாடு கூறுகிறது. செயல்படாமல் நின்று போன உடன்பாடு இது. மருது பாண்டியர்கள் தொடர்ந்து மன்னர்களாக இருந்தனர்.'

நூலாசிரியரது ஆசைப்படி "மருது பாண்டியர்கள் தொடர்ந்து மன்னர்களாக இருந்தனர். (அதாவது ஜூலை 1780 முதல் 1801 வரை மருது சகோதரர்கள் இருவரும் சிவகங்கைச் சீமை மன்னர்கள்) என்பதை இங்கு வாதத்திற்காக ஏற்றுக்கொண்டு அந்த வாதத்தின் மறுபக்கத்தைச் சற்று உற்று நோக்குவோம்.

பொதுவாக மன்னர்கள் தங்கள் ஆட்சிக் காலத்தில், தங்களது சாதனைகள்