பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

248 ⚫ சீர்மிகு சிவகங்கைச் சீமை


தொடர்பாக, இத்துடன் இணைத்துள்ள கடிதத்தை திருப்பி அனுப்பி பதிலளிக்குமாறு எழுதியுள்ளார்.'

இவைகளில் இருந்து கும்பெனி கலெக்டர் மருது பாண்டியர் சசிவர்ணத் தேவரது வாரிசு என்பதற்கான வம்சாவளி பட்டியலைக் கோரவில்லை என்பது தெளிவு. மேலும் கலெக்டர் லூவிங்டனுக்குப் பதிலாக திறமையுள்ள வேறொரு கலெக்டரை நியமனம் செய்யவும் கோரவில்லை. மாறாக, தமது 30.7.1801 தேதியிட்ட நீண்ட கடிதத்தில் கும்பெனி நலன்களுக்கும் மக்களது சுபிட்சத்திற்கும் முரணான வகையில் கலெக்டர் செயல்படுவதாகவும், பகிரங்க விசாரணை ஒன்றிற்கு ஏற்பாடு செய்தால், அதற்கான சான்றுகளை ஆஜர்படுத்த சித்தமாக இருப்பதாகத்தான் பிரதானி மருது சேர்வைக்காரர் குறிப்பிட்டுள்ளார். ஆங்கிலேயரை யாரும் முட்டாளாக்க முயலவில்லை. ஆனால் பதினெட்டாவது நூற்றாண்டில் அவர்கள்தான் நம்மவர்களை முட்டாளாக்கிய நிகழ்ச்சிகள் வரலாற்றில் பதிவு பெற்றுள்ளன.

ஆதாரம் இல்லாத ஆசிரியரது கற்பனைகள்

பக்கம்: 48

"மன்னர் சசிவர்ணத் தேவர் காலத்திற்கு முன்னரே சிவகங்கை சிறு ஊராக இருந்தது.'

பக்கம்: 52

"சசிவர்ணத் தேவருக்கு அகிலாண்டேசுவரி நாச்சியார் மணம் முடிக்கப்பட்டது. இவர் மூலம் மகப்பேறு இல்லையென்பதால் இரண்டாவது மனைவி மனம் முடிக்கப் பெற்று இருக்கலாம்.'

பக்கம்: 82

"..எனவே பழம் பெருமை வாய்ந்த சிறுவயல் என்னும் ஊரை பெரிய மருது பாண்டியர்களுக்கே அளித்து அவரை அதன் தலைவராக்கினார்.'

பக்கம்: 130

".... கர்ப்பிணியாக இருந்தும் களம் நோக்கிச் செல்ல இருந்தார். உரிய நேரத்தில் மருது பாண்டியர்கள் வந்து தடுத்ததால் கர்ப்பிணியான அவரைக் காப்பாற்ற முடிந்தது.'

பக்கம்: 137

"கெளரவம் பாராது மருது பாண்டியர் நாட்டு நிர்வாகத்தை ஒட்ட