பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ்.எம்.கமால் ⚫ 247


பாண்டியர் என உறுதி செய்யும் ஆவணத்தைக் காட்டுமாறு பாண்டியர்களைக் கேட்டான். அதற்கு இவர்கள் ".... இந்தக் கலெக்டர் லூவிங்டன் இங்கு ஏற்படுகிற கலகங்களுக்கெல்லாம் காரணம் இவரை நீக்கிவிட்டு) இவர் இடத்தில் ஒரு திறமையான கலெக்டரைப் போடவும் (கால்டுவெல் பாதிரியாரது திருநெல்வேலி சீமைச் சரித்திரம்) என்று சென்னையில் உள்ள கும்பெனி அரசுக்கே மருது பாண்டியர் கடிதம் எழுதினாராம். எந்த அளவுக்கு மேல் மட்டம் வரை ஆங்கிலேயரை முட்டாளாக்கி வைத்து இருந்தனர் என்பது இதன் மூலம் தெரிய வருகிறதல்லவா?"

மேலே கண்டவாறு மருது இருவர் கும்பெனியாருக்கு எழுதிய எந்தக் கடிதமும் தமிழ் நாடு ஆவணக் காப்பகத் தொகுப்புகளில் காணப்படவில்லை. ஆனால் கலெக்டர் லூவிங்டன் 1.2.1801-ம் தேதிய கடிதத்தில் இறந்து போன ராணியாரது வம்சாவளி விவரங்களுடன் வந்து சந்திக்குமாறு கோரியிருந்ததற்கு சின்ன மருது சேர்வைக்காரது 4.2.1801-ம் தேதியிட்ட கடிதம் அங்கு உள்ளது. இதோ அந்த கடிதத்தின் மொழியாக்கம் செய்யப்பட்ட பகுதி.

'முதல் தேதியிட்ட கலெக்டரது தாக்கீதை பெற்றுக் கொண்டதை அதில் கோரப்பட்டுள்ளதற்கான விவரமும் கீழ்வருமாறு.

எனக்கு அனுப்பப்பட்ட உத்தரவிற்கு இணக்கமாக, தங்களது பணியாளர் மூலமாக இறந்து போன சிவகங்கை ராணியின் வம்சாவளி அட்டவணையை அனுப்பியிருக்கிறேன். கடிதத்தில் கோரியிருந்தவாறு தாமதம் இல்லாமல் தங்களைச் சந்திக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசை. ஆனால் எனது கால்களில் ஏற்பட்ட புண்ணும், பயங்கரமான தலைவலியினால் உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது, நேரில் வரமுடியாமல் தடுத்து விட்டது. விருப்பப்பட்டால், எனது மருமகன் சங்கிலி சேர்வைக்காரரையும், சின்ன ராஜாவையும் அனுப்பி வைக்கிறேன். எனது இதய பூர்வமாக, எப்பொழுதும் எனக்கு வழங்கப்படும் உத்திரவுகளுக்கு இணங்க நடந்து கொள்வேன். மயிரிழையில் கூட எனக்கு அளிக்கப்படும் உத்தரவிற்குப் புறம்பாக நடந்து கொள்ளமாட்டேன். இப்பொழுது மட்டுமல்ல எப்பொழுதும்..."

மருது சேர்வைக்காரர் கும்பெனி மேலிடத்துக்கு கலெக்டர்

லூவிங்டனைப் பற்றி எழுதிய புகார் கடிதத்திலும், ".... எனது எஜமானரது (சிறிய தகப்பனாரது மகன்) மக்களுடனும், வம்சாவளி அட்டவணைகளுடன் தன்னைச் சந்திக்குமாறு கலெக்டர் உத்திரவிட்டிருந்தார். இதனை ஒரளவு நிறைவேற்றினேன். ஆனால் எனது உடல் நலிவு காரணமாக, என்னால் அவரிடம் செல்ல இயலவில்லை. எனது எஜமானரது இளைய தம்பியுடன் விளக்கம் சொல்லத்தக்க அலுவரை அனுப்பி வைப்பதாக அறிவித்து இருந்தேன். இதன்