9 கவிஞன்பால் படாத பாத்திரங்கள் ஓட்டைப் பாத்திரங் களாகி விடுவது இயல்பு. தாம் படைக்கின்ற பாத்திரங் களால் உயர்வடைகின்றான் கவிஞன். (பக்.79) தமிழ்க்காப்பியங்களில், சீருப் புராணத்தில் உள்ளது: போன்று மணம் பொருத்து படலம் விரிவாக இல்லை, இல்லாக்குறையை நிறைவு செய்கின்றார் உமறு. இது. தமிழிற்கு இஸ்லாம் நல்கிய ஏற்றமிகு பரிசு, இன்பப் பரிசு எனலாம். (பக்.82) தமிழ்க் காப்பியங்களிலும் உலா நூல்களிலும் நகர் வலம் காண்கின்ற பெண்கள், தந்நிலை மறந்து, கா வயப்பட்டு, மோக மொழிகள் பகர்ந்து, உலாக்காணும் பாங்கை விரித்துரைக்கக் காண்கிறோம். சீறாவில், உமறுப் புலவர் இந்நிலையில் மாற்றம் கண்டுள்ளார். (பக். 84) பாடல்கள் என்பன வெறும் வார்த்தை ஜாலங்கள் அன்று. எதுகை மோனைகள் என்ற யாப்பு அணிகளு. மன்று, பாடல்கள் தருகின்ற பாநயம் சிறக்கச் செய்யும் பொருள் நயமே பாடல்களின் சிறப்பு என்பதை யும் புரிந்து மகிழ முடியும். இறவாச் செய்திகளை என்றும். எவரும் ஏற்கும் இனிய கருத்துக் கருவூலங்களை, தன் னுள்ளே தேக்கி நிற்பதே பாட்டாகும். அதனால் தான், பாட்டிற்குச் செய்யுள் என்று பெயர். இத்தகு சிறப் புடைய பாடல்களைச் சீறாப்புராணம் முழுவதிலும் காண் கின்றோம். (பக். 138) இப்படிச் சொல் தேடிப் பாட்டமைப்பது கைவந்த கவிஞர்களின் ஆற்றல் ஆம். (பக். 146) உள்ளுவமம் தொக்கப் பாடுவதே சிறம்புடைய கவிதையாகும். வெளிப்படையாகக் கூறுவதைவிட, மறை முகமாக உணர்த்துவதே கவிநயமாகும். (பக்.179)
பக்கம்:சீறாப்புராணச் சொற்பொழிவு.pdf/10
Appearance