உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சீறாப்புராணச் சொற்பொழிவு.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 கவிஞர்களும் புலவர்களும் சமுதாயத்தின் ஆசிரியர்களா வர். அவர்கள் சமுதாயம் மேன்படப் பல அரிய கருத்துக்களைப் போதிப்பவராவார்கள். (பக்.180) கற்பனையைக் கண்டு ரசிப்போம். உண்மையைக் கண்டு னியப்போம். கற்பனைக் கிடையே உண்மை மிகைத்து விளங்கும் போது இதுதான் கவிதை என்று கூறி வாழ்த்தி வரவேற்போம். (பக்.185) கவிஞர் கா.மு.ஷெரிப் நூலறிவோடு நுண்ணறிவும் மிக்கவர். தமிழகம் முழுதும் சுற்றி, மக்கள் வழக்கை நன் கறிந்தவர் என்பதற்கு ஒரு பெருஞ்சான்றாய் இயங்குவது அவர் வடார்க்காடு மாவட்டத்துக் 'கரிப்பு' என்ற சொல்லையும் செங்கற்பட்டு மாவட்டத்துத் 'தாங்கல்' என்ற சொல்லையும், இராமநாதபுர மாவட்டத்துக் 'காவணம்' என்ற சொல்லை அம்,உமறு பயன்படுத்தியிருக்கும் உயர்வை ஆராய்வது. இனி 'சீறாப்புராணச் சொற்பொழிவு' எளியேனுக்கு மிகவும் பிடித்த இந்து-முஸ்லிம் ஒருமைப்பாட்டை எவ்வளவு வலியுறுத்துவது என்பது நூலின் முடிவிலேயே நன்கு விளக்கும். அது வருமாறு: வில்லிபுத்தூராழ்வார் தரும் மகாபாரதம் காட்டும் நெறி, இந்த ஞானமா மேதைகள் ஒப்பிய-உரைத்த உயர் கருத்து வழி ஒழுகுமாறு உலக மக்களை அழைத்த வர்கள் நபிகள் நாயகம் அவர்கள். மக்கள் ஒன்றுபட்டு ஒரே வழியில் நிற்க எடுத்தோதிய மார்க்கம் இஸ்லாமிய மார்க்கம். (பக்.1919 கவிஞர் அவர்களின் நூலில் பல இடங்களில் உமறுவின் யாடல்களை, சிலப்பதிகாரம், கம்பராமாயணம் ஆகிய முற் காப்பியப் பகுதிகளோடு ஒப்பாய்வு செய்து--உவகை - உயர்வு