100 கேட்டிருந்த உமறிப்பினுகத்தாப், துணுக்குற்றார். பொருள் பொதிந்துள்ள இவ்வசனங்கள், யாருக்கும் தீங்கு பயப்பன அல்லவே! மேலும், உண்மையானதும்தானே? இந்த நன்னெறியைக் கூறுபவரை, ஏன் அபூஜஹில் கொலை செய்யச் சொன்னான்?.... சிந்தனை வட்டத்தினுள் சுழன்ற உமறிப்பினுகத்தாப், ஒரு முடிவிற்கு வந்தார். தமது தங்கையிடம் கேட்டு, நபிகள் நாயகம் அவர்கள் இருக்கும் இடத்தை அறிந்து கொண்டார். நேராகச் சென்று, நபிகள் நாயகம் அவர்களைச் சந்தித்து, இஸ் லாமிய மூலமந்திரத்தை உச்சரித்து, முஸ்லிம் ஆகிவிட்டார். நபிகள் நாயகம் அவர்களை, உமறிப்பினுகத்தாப் சந்தித்த இடம், மக்கத்திலே, சபா என்னும் மலையின் அருகே உள்ள ஒரு இல்லம் என்பது வரலாறு. இந்த மலையைப் புலவர் உமறு, தம் தலையில் கங்கையைத் தாங்கி நிற்கும் மலை என்பார். ஆம், மலையில் தானே மேகம் பொழிகின்றது? மேகம் பொழிகின்ற தீர்தானே கங்கையாகவும், காவேரி யா-கவும், வேறு பல ஆறுகளாகவும் பெருகி ஓடுகின்றது? அந்த மலை, கங்கையைத் தலையில் தாங்கியதோடன்றி, தேனைச் சொரிகின்ற, மலர்களைச் சுமந்திலங்கும் தண்டலையை உடுத்தி விளங்குகின்றதாம். முதிரும் கருஞ்சூல் சலதரத்தை, முடியில் தாங்கிச் செழும்தேனை விதிரும் சினைத்தண்டலையுடுத்து, விளங்கும் குவுவு சபாவரை... இது உமறு காட்டும் பாடல் சித்திரம். இந்த மலையின் அடி வாரத்திலே உள்ள வீட்டினுள்ளே உறைந்திருந்த நபிகள் நாயகம் அவர்களைச் சென்று சந்தித்த உமறிப்பினுசுத்தாப்-,
பக்கம்:சீறாப்புராணச் சொற்பொழிவு.pdf/101
Appearance