உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சீறாப்புராணச் சொற்பொழிவு.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15 கையில் வாளேந்தி, கடுங்கோபத்துடன், "முகம்மதைக் கொல்வேன்" என, வீரநடை போட்டு, வீதியினூடே செல் கின்றார் தீரர் உமறிப்பினுகத்தாப். போகும் வழியில், தமது தங்கையின் வீட்டினுள் செல்லுகின்றார். அங்கே ஓதப்படுகின்ற மறையோசை, அவர்தம் காதுகளில் படுகின்றது. "நீங்கள் இப்பொழுது ஓதியது, எதில் உள்ளது?” எனத் தன் தங்கை யிடமும், தங்கையின் கணவரிடமும் கேட்கின்றார். அவர்கள் அச்சத்தால் சொல்ல மறுக்கின்றார்கள். உமறிப்பினுகத்தாபிட மிருந்து, வலுவான அடிபட்டபின், 'நாங்கள் ஓதியது, திருக்குர் ஆன்வசனம்'எனச் சொல்லி, ஓதிய ஏட்டை உமறிப் பினுகத்தாபிடம் கொடுக்கின்றார்கள். வாங்கிப் படிக்கின்றார் உமறிப்பினுகத்தாப். “அவன் யாவருக்கும் யாவினுக்கும் முள்ளரே உள்ளவன்! அவன் யாவருக்கும் யாவினுக்கும் பின்னரும் உள்ளவன் அவள் புறத்திலும் உள்ளாள் அகத்திலும் உள்ளான் அவன்யாவற்றையும் அறிந்தவன் அவனே இறைவன். அவனை, மனிதனைத் தவிர, மற்ற எல்லாமே துதிக்கின்றன.' " இவ்வசனங்களை, ஒருமுறையல்ல, பலமுறை திரும்பத்திரும்பப் படித்தார் உமறிப்பினுகத்தாப். பின்னர், தம் தங்கையிடம் கேட்டார். 'இதைத்தான் முகம்மது உங்களுக்குச் சொல்லித் தருகின்றாரா' என்று. 'ஆமாம், இவற்றையும், இவை போன்ற வற்றையும் எங்களுக்குப் போதிக்கின்றர்கள். இவை திருக்குர் ஆனின் வசனங்கள், இறைவனால் நபிகள் நாயகம் அவர்கட்கு அருளப்பட்ட அருள் வாசகம்' என்பதாக, உமறிப்பினுகத்தா பின் தங்கை பாத்திமா பதில் சொன்னார்கள்.