108 தார்கள். குறிப்பிட்ட நாளில், மலை ஒன்றின்மீது ஏறி நிற்கின் றார்கள் நபிகள்நாயகம் அவர்கள். ஹபீபரசரும், அபூஜஹில் கூட்டமும் ஊர்மக்களும் வெள்ளம் போல் திரண்டு நிற்கின் ளுர்கள். இதில் முகம்மது வெல்லப் போவதில்லை எனச் சொல்லிக் களிக்கின்றான் அபூஜிஹில். சூரியன் சென்று மறை கின்றது. நிலவு இனி வர வேண்டும். சூரியன் மறைந்த விதத்தை உமறுப்புலவர், தமது அரிய பாடலின் மூலம் காட்சிப்படுத்திக் காட்டுகின்றார்கள். ஒரு தொழிலாளி-கண்டிப்புடைய முதலாளியின்கீழ் வேலை செய்கின்ற தொழிலாளி. தினம் பன்னிரண்டு மணி நேரம் அந்த முதலாளியின்கீழ் அவன் வேலை செய்தாக வேண்டும். இடையில் ஓய்வில்லை. ஒருகண நேரம்கூட அந்தத் தொழி வாளி அயர்ந்துவிடக் கூடாது; முடியாது. அயர்வு கொண் டால் அனைத்தும் அழிந்துவிடும். அயர்வின்றி, ஓய்வின்றித் தினமும் பன்னிரண்டு மணிநேரம் நடக்க வேண்டியது அத் தொழிலாளியின் கடமை. தம் கடமை தவறாமல் பணி செய் கின்ருன் அந்தத் தொழிலாளி. வேலை முடிகின்ற மாலை ஆறு மணி அடிக்கின்றது. அவனுக்குப் பசியைப்பற்றிக் கவலை யில்லை. பிறகு எழுந்து உணவு அருந்தலாம். இப்போதைக்கு அலுப்புத்தீர நன்கு தூங்க வேண்டும். எங்கே தூங்குவது? இடம்?... கவலையோடு நோக்கும் அத்தொழிலாளியின் கண் முன்னே, நீண்ட நீலநிற, மெத்தைவிரிப்புத் தென்படுகின்றது அதன்மீது சென்று அமர்கின்றான்; தனது கரத்தை ஊன்றிச் சாய்ந்து படுக்கீன்றான். போர்வையை இழுத்துப் போர்த்திக் கொள்கின்றான். நன்கு தூங்கிப் போகின்றான். மீண்டும் காலை ஆறுமணிக்கு, கணநேரமும் தாமதமின்றி, அவன் தயாராகிவிட வேண்டும். அவ்வாறு செய்யத் தவறவில்லை. இது அவனது" நித்தியத் தொழில். மாலையில் தினமும் அவன் உறங்குவதற்கு அழகிய பட்டுமெத்தை விரித்து வைக்கப்பட்டிருப்பது தவறு வதே யில்லை. மாலைப் போதில், கடலில் சென்று படுத்து மறை. கின்ற சூரியனை, இத்தகு சிறப்புடைய தொழிலாளியாகப் படம் பிடித்தாற் போன்று, பாடல் புனைந்து காட்டுகின்றார் உமறு.
பக்கம்:சீறாப்புராணச் சொற்பொழிவு.pdf/109
Appearance