உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சீறாப்புராணச் சொற்பொழிவு.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

109 சூரியன் காலையிலிருந்து ஓய்வின்றி நடந்த தொழிலாளி. நீலக்கடல் பட்டுமெத்தை. அலை, போர்த்திக் கொள்கின்ற மென் துகில். கடல் என்ற மெத்தையின்மீது, நடந்து அலுத்த சூரியன் என்ற தொழிலாளி, தனது கதிர்க்கரங்களைக் ஊன்றி அமருகின்றன், அலுப்புத் தீரப் படுக்கின்றான். அலை என்ற போர்வை அவன் தன் அழகிய முகத்தையும், உடலையும் மூடி மறைக்கப் படுத்து உறங்குகின்றானாம் சூரியத் தொழிலாளி! அவன் காலையில் மீண்டும் ஆறுமணிக்கு எழுந்தாக வேண்டுமே!... அடரும் வான்திரிந்(து) உடல் இளைப் பாற்றுதற்(கு) அணிமேல் கடல்அ ணைத்திைைரத் துகிலின்மேல் கதிர்க்கரம் ஊன்றி உடல்கு ழைத்திடச் செக்கரின் படத்தினுள் உறைந்து படரும் பேரொளி மறைந்திடப் படுத்தனன் பருதி! பாடிப் பாடி மகிழத்தக்க இவ்வரிய பாடலை, எம்மொழியினும் காணவியலாதென்றே கூறலாம். முந்நூறு ஆண்டுகட்கு முன் னரே; தொழிலாளியையும், அயர்வின்றி உழைக்கின்ற சூரியனையும் உவமித்துப் பாட்டிசைத்துள்ளார் உமறு. நிறை ஹபீபர்சனின் கோரிக்கையை நபிகள் நாயகம் வேற்றுகின்றீர்கள்.ஹபீபரசர் முஸ்லீம் ஆகின்றார் அவரையும் முகம்மது மயக்கிவிட்டார்” என்கின்றான் அபூஜஹில், அவன் கூட்டம் ஆமாம் என்கின்றது.