உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சீறாப்புராணச் சொற்பொழிவு.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

111 அவர்கட்கு உண்ண உணவு அளித்ததோடு, உடுக்க ஆடையும். ஈந்து, தங்கி வாழ்வதற்கான வசதியும் செய்தளித்தார் என் பதைப் படிப்போர் மனத்தில் நன்கு பதியுமாறு பாடுகின்றார் உமறுப் புலவர். உறைந்த மாந்தருக்கு, ஹபஷி அரசெலும் உரவோன்* நிறைந்த நன்கலை யொடும்பல வரிசையும் நிதியும் குறைந்திடா தெடுத்தருளி நன்மொழி பல கொடுத்துச் சிறந்ததன் முதல் இனத்தினும் இளத்தராயச் சேர்த்தான் ஹபஷி என்பது கறுப்பரைக் குறிக்கின்ற அரபிச் சொல். அபிசீனிய நாட்டு மக்கள் கறுப்பரான நீக்ரோக்கள் என்பது நாம் அறிந்ததே. அந்த நாட்டின் மன்னன் பெயர் நஜ்ஜாஷி. என்பதாம். ஏசுவின் வழி சார்ந்த ஏந்தல் அவர். அந்த நன் மன்னன், அகதிகளாகத் தம் நாட்டிற்கு வந்துள்ள முஸ்லிம். களான அரபிரர்களை வரவேற்று, தம் இனத்தவர்களினும் மேலவராக மதித்து நடத்தி மகிழ்வித்தார் எனப் பாடுகின்றாம் உமறு. உடன் பிறந்தே கொல்லும் நோய் எங்கோ தொலை வில் உள்ள மலையில் முளைத்த பூண்டு மருந்தாகும் என்பது பழமொழி. உடன் உறைந்த அபூஜஹில் கூட்டம் விரட்டி யடிக்க, எங்கோ உள்ள அபிசீனிய நாட்டு மன்னன் ஆதரவு. காட்டுகின்றார். அபிசீனியா சென்ற முஸ்லீம்கள், நிம்மதியாக வாழ் கின்றார்கள் என அறிகின்றான் அபூஜஹில். அதை அவனால் தாங்கிக்கொள்ள இயலவில்லை. அபிசீனிய மன்னன் ஏசுவழி சார்ந்தோர் என அறிகின்றான். எனவே, "அங்கு வந்திருப் போர் உங்கள் மார்க்கத்தின் விரோதிகள்" எனக் கடிதம் வரைந்தனுப்புகின்றான். கடிதத்தைப் பெற்ற நஜ்ஜாஷி மன்னர்தம் நாடு போந்து வாழுகின்ற முஸ்லிம்களை அழைத்து, உரவோன் - அறிஞள். முதியோன கலை - ஆடை