112 விசாரிக்கின்றார். ஜஹ்பர் என்பவர், அன்னை மரியம் [மேரி] யற்றிக் குர்ஆனில் உள்ள பகுதியைப் படித்துக் காட்டுகின்றார். கேட்ட நஜ்ஜாஷி மன்னன், 'இது எங்கட்கு விரோதமான தன்று; இவர்கள் இங்கே வாழலாம்' எனத் கின்றார். இதனை உமறுப்புலவர்-, அரசர் நாயகர் ஹபஷி நஜ்ஜாஷியாம் அரசன் பரிசனத்தவர் மொழியினும் அறிவினும் பார்த்தே உரைசமர்ப்புக முகம்மதின் வழியினுக் குரிய தீர்ப்பளிக் வரிசை செய்திவண் இருத்தலே கடனென வகுத்தான் எனப் பாடிச் சிறப்பிக்கின்றர். அபூஜஹிலின் முயற்சி இதிலும் தோல்வியைத் தழுவுகின்றது. இதன் பின்னர் அபூஜஹில் முக்கமா நகரிலே தனது ஆதரவாளர்களைக் கூட்டிவைத்து ஆலோசனை நடத்துகின்றான். ஓரிறைவன் நெறிபேசி மக்களிடையே ஒருமைப்பாட்டை வளர்க்கின்ற இந்த முகம் மதை எப்படி ஒழித்துக் கட்டுவது? இதுவே ஆலோசனையின் மையப் பொருள்.ஆளுக்கொரு யோசனை கூறுகின்றனர். எதிலும் தான் சொல்வதே முன் நிற்கவேண்டும் என எண்ணு கின்ற அபூஹில், அனைத்தையும் மறுக்கின்றான். முகம்மதை யும் அவரைச் சார்ந்தோர்களையும் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்தலே அவர்கட்கான தண்டனையாகும் என முழக்குகின் றான், அவன் சொல் எழுத்து வடிவம் பெறுகின்றது. முகம்மதை சார்ந்தோர்கள். நகரை விட்டு வெளியேறி வாழவேண்டும். ஆனால், அவர்கள் ஊரினை விட்டு ஓடி விடாமல் நாய் பார்த்துக் கொள்ளவேண்டும். ஊரிலுள்ளோர் யாரும் அவர்களுடன் ரேசக்கூடாது. எப்பொருளையும் விலைக்கோ, இனாமாகவோ கொடுக்கக்கூடாது நீர், நெருப்புப்போன்றவையும் இதில் சேர்ந்தனவே எனத் தொகுத்தெழுதி, ஊரின் பொதுத்தல மாகிய கஃபத்துல்லா எனும் பள்ளி வாசலின் முகப்பிலே கட்டித் தொங்கவிடச் செய்கின்றான் அபூஜஹில்.
பக்கம்:சீறாப்புராணச் சொற்பொழிவு.pdf/113
Appearance