உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சீறாப்புராணச் சொற்பொழிவு.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 புராணத்தைத் திரட்டாக ஒரு நூறு பாடல்களைச் சிறந்த ஓவியங்களுடன் கவிஞர் விளக்கங்கள் தந்து அச்சீடு செய்தால் எல்லோருக்கும் இன்பமும் பயனும் கிட்டுமே என்று எண்ண வேண்டியுள்ளது. கவிஞரின் 'சீறாப்புராணச் சொற்பொழிவு' நூலை இலக்கிய நோக்கோடுதான் படித்தேன். ஆனால் இதற்கு முன்னர் பல முறை முயன்று படித்தும், என் பாறை நெஞ்சில் படியாத நபி பெருமானின் நல்வாழ்வு கவிஞரின் நாவல் போன்ற இலக்கிய விளக்க நூலால் என் நெஞ்சில் பசுமரத்தாணிபோல் பதிந்து விட்டது! இதுதான் தமிழின் - இலக்கியத்தின் ஆற்றல் போலும்! கவிஞரின் உள்ளத்தைக் கவிஞர்தான் உணர முடியும். அந்த வகையில் உமறுப் புலவரின் உள்ளத்தைத் தெள்ளிதின் உணரக் கூடிய அறிவும் ஆற்றலும் அனுபவமும் பெற்ற ஒரு. பெருந் தமிழ்க்கவிஞர்தான் கா. மு. ஷெரிப், அந்த வகையில் இந்த நூல் பற்பல பதிப்புகளையும் (இப்பதிப்பில் உள்ள சிற்சில அச்சுப்பிழைகளையும் நீக்கி, பெற்றுத் தமிழ் மக்களின் அன்றாட வாழ்விலும் இந்து-முஸ்லிம் ஒருமைப் பாட்டை உருவாக்குவதாக! இஸ்லாம் - சாந்தி - நெறி--உலகெங்கும் ஓங்குவதாக! 1 ந. சஞ்சீவி 28-12-80