"பிறை" ஆசிரியர் ஆவிஜனாப் மௌலவி எம். அப்துல் வஹ்ஹாப் எம்.ஏ., பிடி, எச். அவர்களின் அணிந்துரை பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் நஹ்மதுஹூ வ நுஸல்லி அலா ரஸூவிஹில் கரீம் I வானொலியில் சீருப் புராணச் சொற்பொழிவு" என் னும் இந்த வளமார் தொகுப்பைத் தமிழ் கூறும் பேருலகுக்கு வழங்கியிருக்கும் இலக்கியவள்ளல் கலைமாமணி கவி கா.மு. ஷரீப் அவர்களுக்கு அறிமுகம் தேவையில்லை. ஆனால் அவர் களின் கொடையான இத்தொகுப்புக்கு ஓர் அறிமுகம் தேவை தான்--ஏனெனில் இது ஒரு புதுமையான முயற்சி, அருமை வானதும்கூட! மாணவர் சாதாரணமாக ஒரு நூல் ஒரு குறிப்பிட்ட துறை விளருக்கு மட்டும் பெரிதும் நலமும் நயமும் பயப்ப தாக அமையும். ஆனால் இந்த மணியான நூல் ஆய் வாளருக்கு, இலக்கிய நுகர்வாளருக்கு, களுக்கு, பொது வாசகர்களுக்கு, ஒழுக்க இயவில் விருப்புக் கொண்டோருக்கு, எழுத்தாளர்களுக்கு, பேச் சாளர்களுக்கு-இப்படிப் பல்வேறு நிலையினருக்கும் சுவையும் பயனும் நல்கக் கூடியது. இஸ்லாமியத் தமிழ்ப் படையல்களிலே இன்று பெரிதும் பேசப்பட்டு வருவது சீறாப் புராணமேயாம். எனினும் அதை முழுவதும் படித்து, உணர்ந்து, ரசித்து, அதன் வயப்பட்டு, அதன் பெற்றியை எடுத்துக் கூறுவோர் வெகு சிலரே உளர்; அச் சிறு திருக்கூட்டத்திலே போற்றத் தகுந்த ஒரு தனியிடத் தைப் பெற்றிருப்பவர்கள் கலைமாமணியவர்கள். ! ள தமிழில் பெரும் புகழ் ஈட்டியுள்ள பல்வேறு காப்பியங் களில் தங்களுக்குள்ள தரமான புலமையை அடித்தளப்படுத்தி, அவற்றோடு ஒப்பு நோக்கும் போது எந்தெந்த அம்சங்களில்
பக்கம்:சீறாப்புராணச் சொற்பொழிவு.pdf/14
Appearance