உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சீறாப்புராணச் சொற்பொழிவு.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 என்கின்றார் புல்வர் உமறு. தப்பிச் செல்லுமாறு இறைவளின் அறிவிப்புக் கிடைக்கின்றது நபிகள் நாயகம் அவர்கட்கு. ஆண்டவனைத்துதித்துப் போற்றியவர்களாக, தம் பெரியன்னை யிடத்தும் மகளிடத்தும் விடைபெற்று, மருமகன் அவிரலி அவர்களைத் தம்படுக்கையில் படுக்குமாறு கூறி, வெளியே வருகின்றார்கள் மாநபி அவர்கள். மணிவாட்கள் தரைதனில் கிடக்க, தன்னைக் கொல்ல வந்த கூட்டம் ஆழ்ந்த தூக்கத்தில் சிதறிக் கிடக்கின்றது. கொடுமையின் மொத்த உருவமான அபூஜஹிலும் உறங்கிக் கிடக்கின்றான். இது போன்ற வாய்ப்பு கொடுமனத்து அபூஜஹிலுக்குக் கிட்டி இருந்தால் என்ன செய்திருப்பான்? காலமெலாம் தன்னைப் பகைக்கின்ற அபூஜஹிலைக் கொல்லச்சந்தர்ப்பம் வாய்த்தும், நபிகள் நாயகம் அவர்கள் எதுவும் செய்யவில்லை. தாம் தப்பிச் சென்று விட்டதை விழித்தபின் அவர்கள் அறியவேண்டும் என்பதற் காக, தூங்குகின்ற ஒவ்வொருவர் ரீதிலும், சிறிதளவு மண்ணைத் தூவி விட்டு, அந்த நள்ளிரவிலே, பிறந்த ஊரை யெல்லாம் விட்டு, பெற்ற மக்களை விட்டு, உற்றார் உறவினைரை விட்டுத் தன்னந்தனியாக வெளியேறிச் செல்கின்றார்கள். திருமனைப் புறத்தில்நின்றொரு பிடிமண் செங்கையில் இளிதுஎடுத்து ஏச்தி ஒருதரம் யாசீன்ஓதி நால்திசையும் உறங்கிய காபிரைநோக்கி. எறிந்து சொரிகர்ச் சுதைமாமனையிடம் கடந்து, தோன்றினர் நீண்டமா மறுகில் இறை நம்பிக்கை என்பது அச்சத்தைத் தவிர்க்கும் அரு மருந்து. இந்த நம்பிக்கையாளர்கட்குத்துன்பம் என்பதே வில்லை. துன்பத்தையும் இன்பமாய்க் கொள்வோரே துறவி களும் ஞானிகளும், இன்பத்தை வெறுத்து துன்பத்தை வலிந் தேற்றுத் துறவு பூண்டவரே புத்தர். சிரித்துக்கொண்டே நஞ்சினை உண்டவர் கிரேக்க ஞானி சாக்ரட்டீஸ்.. தாம் கொண்ட கொள்கைக்காக, அரசின்