131 ஏவலர் பறிக்கு முன்னரே, தமது கண்களைத்தாமே தோண்டி எறிந்தவர் கூரத்தாழ்வார். தாயார் உடலைத் தாமே சிதைத் துத் தீயிலிட்டவர் ஆதிசங்கரர். ஆனால், இவர்களில் யாருக்கும் தமது எதிரிகளைத் தனி ஒருவராக யாரும் காணாநிலையில், கொன்றொழிக்கின்ற வாய்ப்புக்கிட்ட வில்லை. கிட்டியிருப்பின், நபிகள் நாயகம் அவர்களை யொப்பவே நடந்திருந்திருப்பர் எனக்கொள்ளவும் இயலும். ஆனால், மெய்ப்பித்துக் காட்டு கின்ற வாய்ப்பு, நபிகள் நாயகம் அவர்கட்கு மட்டுமே கிட்டிற்று.கிட்டுமாறு அருள் புரிந்தான் உலகினைக்காக்கின்ற இறைவன். செல்லிடத்துக் கரப்பான் சினம்காப்பான் அல்லிடத்துக் காக்கிலென்? காவாக்கால் என்? என்பார் வள்ளுவர். இந்த அரிய குறட்பாவிற்கு இலக்கியமாக அமைந்துளது, தூங்குகின்ற எதிரிகளைக் கொல்லாதது மட்டுமின்றி, துன்புறுத்தாமலும் நபிகள் நாயகம் அவர்கள் தம் இல்லம் விட்டு வெளியேறிச் சென்றது. மன்பெரும் புவியினில் வாழும் மாந்தரில் துள்புறா தவரிலைத் துன்பைத் துன்புறா(து) இன்பமே கொள்பவர்இலங்கும் பொற்பதிக்(கு) அள்பராய் இருப்பர்என்(று) அறிவு சொற்றதே, இது, நபிகள் நாயகம்களின் நன்வாக்கு. தமது வாக்கின்படி நடந்து, முன்மாதிரியாகத் திகழ்கின்றார்கள் நபிகள் நாயகம் அவர்கள். பிறந்தது முதல், ஐம்பத்துமூன்று ஆண்டுக்கால மாக வாழ்ந்திருந்த ஊரை விட்டு, நள்ளிரவிலே தன்னந்தனி யாக வெளியேறிச் சென்ற நபிகள் நாயகம் அவர்கள், தமது முதற்சீடராகவும், பெண்ணீந்த மாதுலராகவும் உள்ள அபூ பக்கர் சித்தீக் வீட்டை அடைந்தார்கள். சூழ் நிலையை நினைந்து, தூக்கம் இழந்திருந்த அபூபக்கர் சித்திக் அவர்கள், பெருமானாரின் காலடி ஓசையும், கனிந்த குரலொயுலிம் கேட்டு வந்து கதவம் திறந்தார்கள். சின்னேரத்தில் இரண்டு உருவம்- ஒட்டகையின்மீது அமர்ந்து செல்வதை, வானமும் வானத் துறைந்த நட்சத்திரங்களும் கண்டு பொறுமி இருக்க வேண்
பக்கம்:சீறாப்புராணச் சொற்பொழிவு.pdf/131
Appearance