இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
132 டும். மேகக் கூட்டம் தனது அழுகையைப் பணியாக உகுத்துக் கொண்டிருக்க, நபிகள் நாயகம் அவர்களும், மலிந்த அறிவு மேதையான அபூபக்கர் சித்தீக்கவர்களும், மக்கமா நகரினுக்கு அண்மையில் உள்ள தௌர் என்னும் மலைக்குகையில் சென்று தங்கினார்கள். இப்பொழுது நாம் அறிந்து கொண்டிருப்பது சீறாப்புராணத்தில் உள்ள யாத்திரைப்படலம் தருகின்ற வரலாற்றின் ஒரு பகுதி. உமறுப்புலவர் தம் தமிழ்ப்பாக்கள் தருகின்ற சரித்திரச் சான்றுகள்.