உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சீறாப்புராணச் சொற்பொழிவு.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. 23 மனிதன் உயிரினங்கள் அனைத்தினும் மேம்பட்டவன். ஆனால் அவன் மனமோ கொடிய விலங்கினத்தினும் கீழானது.. படைப்பால் உயர்ந்த மனிதன், செயலால் மிருகங்களிலும் தாழ்ந்தவனாகி விடுகின்றான். இவ்வரிய தத்துவம்,விடக் மிட்ட படலத்தில் நமக்குப் பாடகமாக உளது. நபிகள் நாயகம் அவர்களின் எச்சில் அமுதம் விஷக் கடுப்பை விரட்டியோட்ட, மதீன மதீன மாநகர் நோக்கிப் புறப்பட்டார்கள் நாயகத் திருமேனி அவர்களும் அபூபக்கர் சித்திக் அவர்களும், இரண்டு ஓட்டகங்கள் அவ்விருவரையும் சுமந்து செல்கின்றன. வேதவாக்கின்படி நடக்கின்ற மனி' தரை யொப்ப, அவ்வொட்டங்கள் தமக்குக் கற்பித்துள்ள சொல்லின் வழி நடந்தனவாம். மனித மனம், அறி வெனும் கடிவாளத்திற்கு அடங்காமல் தனது போக்கில் செல்வதாயிருக்க, பகுத்தறிவு இல்லா ஒட்டகங்கள், தலைக்கயிற் றின் அசைவின் வழியன்றி வேறுவழி தவிர்த்து தடக்கின்றன. வஞ்சகரைப் போன்று, தரையில் மறைந்து கிடந்து, கால்களில் குத்துகின்ற முட்களை அவை பொருட்படுத்தவில்லை. முடிந்த வரை உழைப்போம், கொடுத்ததைப் பெறுவோம் என்ற அக் காலத் தொழிலாளர்களை யொப்ப, இரவெலாம் நடந்தோமே என்ற நினைப்பேயின்றி, பகலிலும் அவ்வொட்டங்கள் அலுப் பின்றி நடக்கின்றன. ஒட்டகங்கள் மீது நபிகள் நாயகம் அவர்களும், அபூபக்கர் சித்தீக் அவர்களும் செல்வதைக் கண்ட ஒருவன் மக்கமாநகருக்கு வந்து, 'நான் வருகின்ற வழியிலே இருவர் ஏருவதைக் கண்டேன்' என்றாள். அவ்ளாசகம் ஊர்