145 முற்றிலும் பரவு முள், சுறாக்கத்தென்பான், கிள்ளையிலும் வேக மாகச் செல்கின்ற குதிரையின் பீது தாவி ஏறினான்; வில்லும் வாளும் தோளிலும் இடையின் மீதும் இலங்க, மனவேகத் தினும், மா வேகம் அதிகம் என்னும் வகையிலே கு திரையை யத் தட்டி யோட்டினான். குதிரை வருகின்ற கடும் விரைவினைக் கண்ட அபூபக்கர்சித்தீக் அவர்கள், வருபவன் அபூஜஹிவின் ஆள்தான் எனத் தெரிந்து கொள்கின்றார்கள், வாளும் வில் லும் தாங்கி வருகின்றான் பகைவன், தொடர்கின்றான் அவன் நம்மை" என்று நபிகள் நாயகம் அவர்களிடத்தே உரைத் தார்கள் அபூபக்கர் சித்தீக் அவர்கள். தௌர் குகையில், எதிரி கள் பலர் வந்தபோது, 'அவர்கள் பலர்; நாம் இருவர் தாமே உள்ளோம் என அபூபக்கர் அவர்கள் கூறியக்கால், 'நாம் இருவரல்லர்; மூவர் உள்ளோம். நம்முடன் இறைவனும் அக லாது அருகிலே உள்ளான். அவன் நமது நலத்தில், நம்மினும் மேலான அக்கறையுடையவன்" என்பதை உணர்த்திய அச்ச மற்ற நபிகள் நாயகம் அவர்கள், இவன் ஒருவன் தானே? நாம் மூவர் இருக்கின்றேம்" எனக் கூறி, "வகுவோன் இறை தம்பிக்கையற்றவன். எனவே, இவனுக்கு இதைவனின் துணை இல்லை. தனித்தவனாக, தன்பலத்தை மட்டுமே நம்பி வந் கின்றான். நாமோ நமது பலத்தைவிட, இறைவன் பலம் வலு வுடையது என மனம் ஒப்பி ஏற்றுள்ளோம். அவனிருக்க அச்சமேன்?" என்று அழகுபட அறிவு ஏற்க உரைக் கின்றார்கள். நபிகள் நாயகம் அவர்கள்தம் உரையைக் கவிதையாக்கம் செய்கின்ற உமறுப்புலவர், 'இறப்பில்வாத வன் இறைவன்; அவனும் அவனுடன் நாம் இருவரும் இருக் கின்றோம்!' என்ற உறுதியோடு கலக்கமற்ற தன்மையில் கூறினார்கள் என்பதுதொக்க, சொல் தேடி அமைத்துப் வா விசைக்கின்றார். இறுதியற்றவள் ஒருவன் நாம்இருவர் இங்கெய்தி மறம்முதிர்ந்து எதிர்வருபவன் ஒருவன் மற்றுஇவனால் பெறுவது என்கொல்? என்றுஉரைத்தளர் தீனிலைபிரிக்கும் செறுநர்ஆகிய விலங்கினம் கெடவரும் சிவம். சீ.பு.-9
பக்கம்:சீறாப்புராணச் சொற்பொழிவு.pdf/145
Appearance