146 இப்பாடலிலே வருகின்ற பிரிக்கும் என்ற சொல்லிற்கு, 'சேர்க்கும்' என்பது பொருள், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள வழக்குச்சொல் பிரிக்கும் என்ற சொல். ஓர் இடத்தில் உள்ள பொருள் அங்கிருந்து பிரிந்தால் தானே இன்னோர் இடத்தில் வந்து சேர இயலும்? எனவே, 'எவ்வளவு பொருள் சேர்த்தாய்?' என்பதை 'எவ்வளவு பிரித்தாய்?' என்று அங்குள்ளவர்கள் கேட்பார்கள். சோஷலிச ஆக்கத்திற்கு இது பொருள்தரும் நற்சொல்லாகும். இச் சொல்லை, தனிச் சொல்லாக்காமல் இச் சொல்லிற்கு முன்னாலுள்ள தீனிலை என் கின்ற சொல்லிலிருந்து ஆரம்பித்து ஒரு வாசகமாக, அதாவது, தீனிலை பிரிக்கும் 'செறுநர் ஆகிய விலங்கினம் கெடவரும் சீயம்' எனப் படித்தால், நன்னெறியைப் பகைக்கின்ற, வெறுக்கின்ற, அழிக்கின்ற மிருகத்தினரை வென்று, அவர்களை நன் நெறியில் சேர்க்கின்ற ஆற்றல் உடைய சீயம் எனப் பொருள் படும். இப்படிச் சொல் தேடிப் பாட்டமைப்பது கைவந்த கவிஞர்களின் ஆற்றல் ஆம்.உமறுப் புலவரின் அவ்வாற்றலை ஈண்டுக் கண்டு உவக்கின்றோம். உமறு,மேலும் நாயகம் அவர்கள் கூறியதாகப் பாடுகின்றார், "கலங்குதல்.. ஈமான் நிலையும் வீரமும் புறம் விடுத்திருப்பவர் நெறியே!' ‘கலங்குதல்’என்பது, ஈமான் நிலையும் வீரமும் புறம் விடுத் திடுபவர் நெறியேயாம். ஈமான் என்பது, நம்பிக்கை என் பதைச் சுட்டுகின்ற அறபிச் சொல். இச் சொல் இறையை, மறையை, நபியை, வானவரை, இறுதித் தீர்ப்பு நாளை, சொர்க்க நரகத்தை உறுதியாக நம்புவதைச் சுட்டுவதற்கென அறபியில் பயன்படுத்தப் படுகின்றது. எனவே, 'ஈமானையும் வீரத்தையும் தன்னகத்தே இருந்து அகற்றிவிட்டவர்கள் அல்லவா மனக்கலக்கம் அடைய வேண்டும்? நாம் ஈமானும் வீரமும் உடையவர்கள்; அஞ்சத் தேவையில்லை. அச்சமில்லாத போது, அஞ்ச வருவது என்ன இருக்கிறது? என்று, எவ் விடத்தும் எந்த நிலையிலும் ஆண்டவனைத் தவிர்த்து வேறு எதற்கும் அஞ்சாத நபிகள் நாயகம் அவர்கள் மேலும் விரித்துக் கூறினார்கள், என்பது உமறுப்புலவரின் கூற்று.
பக்கம்:சீறாப்புராணச் சொற்பொழிவு.pdf/146
Appearance