147 அபூபக்கர் சித்தீக் அவர்களை யொத்தாருக்கு இவ்வுரை அதிகமே என்றலும், நம் போன்றோர்கட்கு அடிக்கடி நினைவு படுத்த வேண்டிய நல்லுரையாகும் இது. பாரதியார் கூறு வதைப் போன்று, நாம் எது எதை எல்லாம் கண்டு அஞ்சு கிருேம், கலங்குகின்றோம்? குதிரையின் மீது, இல்லை கலிமாவின் மீது, (கலிமர் என்பது போர்க்களம் கண்ட குதிரை) கலிமா மந்திரத்தை, அதாவது இஸ்லாமிய மூல மந்திரத்தைப் போதிக்கின்ற நபிகள் நாயகம் அவர்களைக் கொலை புரியக் கலிமா ஏறிப் பறந்து வந்த சுறாக்கத், நபிகள் நாயகம் அவர்களை நெருங்கி விட்டான். வில்லை எடுத்தான், அம்பினைத் தொடுத்தான். எய்வதற்குக் குறி பார்த்தபோது, குதிரை இடறிக் கீழே விழ அவனும் விழுந்து மண்தோய்ந்த முகத்துடன் எழுந்தான். உள்ளத்திலே சிறு அச்சம். எனினும் பண ஆசையால் மீண் டும் தொடர்ந்தான். இம்முறை குதிரையின் கால்கள் பொதி மணலில் புகுந்துவிட மறுபடியும் விழுந்தெழுந்தான், எழுந்து மீண்டும் தொடர்ந்தான். இம்முறை நபிகள் நாயகம் உதவி னாலன்றி, மீள முடியாத நிலைக்குள் ஆனான். எனவே ஒட்டகத் தில் உவந்து செல்கின்ற பெருமானார் அவர்களின் காதில் விழுமாறு உரத்த குரலில், தனியவன்தன் திருத்தூதே, முகம்மதுவே பொறைக்கடலே, தமியேள் கூற்றை உனதுசெவிக்கு இடவேண்டும். வேண்டும்என இரக்கமொடு உரைக்கின்றானால். துன்பக் கடலாழ்ந்து சுருக்கத் என்பான் அழுதரற்றிக் கூவி அழைத்த ஓலம் கேட்டு ஒட்டகத்தை நிறுத்தினார்கள் நபிகள் நாயகம் அவர்கள். சுறாக்கத் இருந்த இடம் சென்று அவன்தன் இடரகற்றினார்கள். நபிகள் நாயகம் அவர்கட்கு இறைவனின் பலம் அதிகம் இருக்கிறது, அவர்களை வெல்ல முடியாதென் யதை உணர்ந்தான் சுறாக்கத். இறுதி வெற்றி நபிகள்
பக்கம்:சீறாப்புராணச் சொற்பொழிவு.pdf/147
Appearance