" 25 இஸ்லாம் என்பது, இறைவன் ஒருவனே என்பதும், இறைவனுக்கு உருவம் இல்லை என்பதும், இறைவனை நம்பவேண்டும் என்பதும், இறைவன் படைப்பில் மனிதர்கள் அனைவரும் சமம் என்பதும், பணத்தாலோ, நிறத்தாலோ, மொழியாலோ, மனிதரில் ஏற்றத்தாழ்வு கூறுவது தீது. என்பதுமாம். இவற்றோடு, மனிதனை மனிதன் அடிமைப் படுத்துவது, குடிப்பது, சூதாடுவது, விபச்சாரம் புரிவது, பொய் புகல்வது, களவாடுவது, கொள்ளை லாபம் அடிப்பது, பண்டங்களைப் பதுக்கிவிடுவது. நிறுவையிலோ அளவையிலோ மோசடி செய்வது, வட்டி வாங்குவது, ஆகியவ வற்றையெல்லாம் விடுத்து மனிதர்கள் நேர்மையாக. நடக்கவேண்டும் என்பதுமேயாம். 'இவற்றையெல்லாம் செய்வது எங்கள் உரிமை: 'செய்யாதே' என்று சொல்ல இந்த முகம்மது யார்?" என்பதே அபூஜஹில் கூட்டத்தாரின் கேள்வி. எனவே, அபூஜஹிலின் தொல்லையிலிருந்து விலகி, மதீனமா தகருக்கு வந்து, தங்களின் கொள்கைகளை மக்கள் முன்பு வைத் தார்கள் நபிகள் நாயகம் அவர்கள். மதீனமாநகரில் வாழ்ந்த மக்களேயின்றி, சுற்றுப்புறக் கிராம வாசிகளும் நபிகள் நாயகம் அவர்களின் கொள்கைகளை ஏற்று ஒழுகலாயினர். நாளுக்கு நாள் நாயகத் திருமேனி அவர்களின் வழியில் மக்கள் கூட்டம் சேர்ந்துகொண்டேபோவது கண்டு, பொருமை யுற்ற கூட்டம், அபூஜஹில் தலைமையில் படைகொண்டு மதீனா மாநகரைத் தாக்க வந்து கொண்டிருக்கின்றது என்ற செய்தி, நபிகள் நாயகம் அவர்கட்கு எட்டிற்று. ஒற்றர்களை அனுப்பி வேவு பார்த்துவரச் செய்தார்கள். படைகொண்டு அபூஜஹில் வருவது உண்மை என்றே தெரிந்தது. பயிற்சிபெற்ற ஆயிரம்
பக்கம்:சீறாப்புராணச் சொற்பொழிவு.pdf/155
Appearance