உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சீறாப்புராணச் சொற்பொழிவு.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 வீரர்களுடன், எழுநூறு ஒட்டகங்கள், நூறு குதிரைகளுடன் படைக்கலன்கள் ஏத்தியவாறு அக்கூட்டம் வருகின்றது என் அதை அறிந்தபோது, தமது சகாக்களைக் கூட்டிவைத்து நபிகள் நாயகம் அவர்கள் ஆலோசனை நடத்தினார்கள். மதீனாமா நகரினை அபூஜஹிலின் படையினர் நெருங்கும் முன்னர், எதிர்த்துச் சென்று வழியிலே அவர்களைத் தடுத்து நிறுத்திப் போரிடவேண்டும்; என்று நபித் தோழர்கள் ஆலோசனை கூறினார்கள். அதன்படி செய்வதென முடிவாயிற்று. படைக்கு ஆள் திரட்டப்பட்டது. மொத்தம் சேர்ந்தவர்களை எண்ணிப் பார்த்தபோது, 314 பேர்களே இருந்தனர். இதில் ஒருவர் போரிட இயலா நிலையில் உள்ளவர்; அவரை நீக்கி எண்ணிப் பார்த்தபோது, முந்நூற்றுப் பதின்மூன்று பேர்கள் மட்டுமே இருந்தனர். ஒட்டகம் நூறு இருந்தன. குதிரைகள் இரண் டிற்கு மேல் இல்லை. ஆயுதங்களும் அதிகமில்லை. இந்த முந்நூற்றுப்பதின்மூன்று பேர்களிலும், போர்ப்பயிற்சி பெற்ற வர்கள், உ. மறிப்னு கத்தாப், ஹம்சாரலி போன்ற ஓரிருவரே இருந்தனர். ஆனால், இவர்களிடையே அன்பு இருந்தது; அறம் இருந்தது; இரக்கம் இருந்தது; ஈகை இருந்தது; தானம் இருந்தது; தவம் இருந்தது. எதிரிகள் ஆயிரம் பேரானால் என்ன? அதற்கும் மேலானால்தான் என்ன? எதிர்த்து வெல்வது, அல்லது வீர சொர்க்கம் புகுவது என்ற ஊனமில் ஊக்கம் இருந்தது. இவற்றிற்கு மேலாக, இறை நம்பிக்கை இருந்தது; தனக்கென வாழாத் தியாக மனப் பான்மை இருந்தது. எனவே, இச்சிறு கூட்டத்தினர் அச்ச மின்றிப் புறப்பட்டார்கள், மதீனத்திலிருந்து மூன்று அல்லது நான்கு நாள் பயணத்திற்கு அப்பால் உள்ள பத்து என்னும் இடத்தில் சென்று, அபூஜஹில் கூட்டத்தைச் சந்தித்தார்கள். முன்னரே அங்கு வந்துவிட்ட அபூஜஹில் கூட்டம் வசதியான இடத்தில் முகாமிட்டிருந்தது. நாயகத் திருமேனி அவர்களைச் சேர்ந்தோருக்கு வசதி குறைவான இடமே கிட்டிற்று. முத் நூற்றுப் பதின்மூன்று பேரைக்கண்ட அபூஜஹில் கூட்டம், 'என்ளி நகைத்தது. 'போதிய படைக்கலன்களும் ஏறு