163 நாயகப் பேரொளியவர்களின் அவ்வுரையை உமறுப்புலவரின் பாடலாக நாம் காண்கின்றோம். திருக்குஉறும் கருத்துடைஅயவர் சினத்தொடும் கெழுமி இருக்கும் நம்மிடத்துவருவார் எனில், எதிர்ந்து முருக்கிநம்புகழ் நிறுத்துதல் கடன்என மொழிந்தார் மருக்கொழுந்தொடை துயல்புய பூதரவள்ளல். நாயகத்திருமேனி அவர்கள்தம் வாக்கினை வேதவாக்கின் விளக்கம் என ஏற்றொழுகும் நபித்தோழர்கள், தமக்குஇடப் பட்ட கட்டளைப்படியே ஒழுகினர். ஆனால், இரு நூற்றைம்பது கல் தொலைவினைக் கடந்து வலிந்து போரிடவந்து குழுமியுள்ள அஞ்ஞான இருள் நிறைந்த கல்மனத்தோரின் பண்பு வேறு விதமாக இருந்ததாம். புலவர் உமறுபாடுகின்றார். அல்லும்கல்லும் ஒத்தனமனக் குபிரவர் படையில் செல்லும்செல்லும் என்றுஏவின விசிறியின் திரள்கள் கொல்லும்கொல்லும் என்றுஆர்த்தன பல்லியங் குமுறல் வெல்லும்வெல்லும் என்றாடின விடுநெடும் கொடிகள். நீண்ட நல்ல விளக்கம் செய்ய வேண்டிய இப்பாடலை, ஓசை நயம் கருதியும், ஒழுங்கற்றோர் மனப்பாங்கு தெரியவும் பல முறை பாடி, மனத்துள் பதியவைத்துக் கொள்ளலாம். மரபு ஒழிந்த மக்கமாநகர மறமாக்களின் நிலை இது என்றால், வேதம் மறுவும் நாவுடைய நபிகள் நாயகம் அவர் கள்தம்படையினர் எப்படி? மாற்றலர் திறமும்கூறும் வாய்மையும் ஒடுங்க,வெற்றி ஊற்றமும் ஒடுங்கத் தேறாஉள்ளமும் ஓடுங்க, வந்த தோற்றமும் ஒடுங்க,நிள்ற தொன்நெறி ஒடுங்க,மாறாச் சீற்றமும் ஒடுங்க,வேத தீனவர் ஆர்த்துநின்றார். பாடல்களின் ஓசை ஒலிப்பின்வாயிலாகவே பரபரப்பாளரின் யாங்கினையும்,பண்புடையார் நெறியினையும் விளக்கிவிடுகின்றார்
பக்கம்:சீறாப்புராணச் சொற்பொழிவு.pdf/163
Appearance