உமறுப்புலவர். எனவே, தேவையில்லை எனலாம். 164 ப்பாடல்கட்குச் சொல்விளக்கம் . தம்மை எதிர்த்தோரை எதிர்த்து நபிகள் நாயகம் அவர் கன் நடத்திய போர்களிலே இந்தப் போர் கடுமையான போர் எனலாம். ஒரு கட்டத்திலே நபிகள் நாயகம் அவர்கள் இறந்து பட்டார்கள் என்னும் வதந்தியை எதிர் முகாமிலுள்ள கொடி யோன் ஒருவன் பரப்பி விடுகின்றான். எதிரிகள் அணியில் மகிழ்ச்சி ஆரவாரம். நாயகத் தோழர்களிடையே சோர்வு. இச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, ஹம்சா ரலி அவர் களை ஒருவன் மறைந்து நின்று வேல்வீசிக் கொன்றுவீடு கின்னான். நபிகள் நாயகம் அவர்களின் சிறிய தந்தையார் ஹம்சா ரலி அவர்கள், ஆற்றல் மிக்க போர்த்தளபதி யாவார் கள். எதிரிமுகாம் தலைவனின் மனைவியான இந்தா என்னும் மாது, இறந்துபட்ட ஹம்சா ரலி அவர்களின் உடலை உருத்தெரி யாதபடி சின்னாபின்னப் படுத்திவிடுகின்றாள். குடலைப்பிடுங்கிக் கழுத்தில் மாலையாகப் போட்டுக் கொண்டு கலிங்கத்துப் பரணி யில் வருகின்ற பேய்க்கொப்பாக ஆடிக் களிக்கின்றாள். நபிகள் நாயகம் அவர்களின் முன்பற்களின் இரண்டு இப்போரில் உடைபட்டுப்போகின்றன. முகத்தில் குருதிகொப்பளித்தோடும் படியான காயம் ஏற்பட்டுவிடுகின்றது. மயக்கமுற்றநிலை சிறிது நேரம் நீடிக்கின்றது. பிறகு மயக்கம் தெளிந்து போர்க் காரியங்களில் ஈடுபடத் தமது தோழர்களை ஏவுகின்றார்கள். நபிகள் நாயகம் அவர்கள் இறந்து பட்டார்கள் என்ற தவறான செய்தி மதீனமாநகரில் பரவவே, அங்குள்ள பெண் களெல்லாம் நாயகம் அவர்களைக் காண்பதற்கென உகதுமலை அடிவாரத்தை நோக்கி ஓடிவருகின்றார்கள். அதிலே ஒரு பெண், தன் முன்னம் எதிர்ப்பட்ட ஒரு வீரரிடம் நபிகள் நாயகம் அவர்கள் எப்படி இருக்கின்றார்கள் என்று வினவு கின்றாள்.'போரில் உள் கணவன் இறந்து விட்டார்' என்கிறார் அந்த வீரர். 'அதிருக்கட்டும்; நபிகள் நாயகம் அவர்கள் எப்படி இருக்கின்றார்கள்' எனக் கேட்கின்றாள் அப்பெண்மணி.
பக்கம்:சீறாப்புராணச் சொற்பொழிவு.pdf/164
Appearance