உயர்திரு. டாக்டர் ந. சஞ்சீவி அவர்கள் குறிப்பிட் டிருப்பது போன்று, சீறாப்புராணத்திற்கு முழு அளவில் உரை செய்ய வேண்டும் என்பதே எனது அவா. செய்து கொண்டும் உள்ளேன். இறையருளால், பதவுரை, விரிவுரைகளுடன் மிக விரை வில் ஒரு காண்ட அளவிலேனும் சீறாப்புராணத்தை அச்சிட் டளிக்க இயலும். உங்கள் அன்பும் ஆதரவும் தேவை. பொதுவாக, அனைவரும் படிக்க வேண்டும் என்கின்ற நோக்கில், இஸ்லாமிய மரபுச் சொற்கள் பெயர்கட்கு முன் சேர்க்கப்படவில்லை. இறைவன் மன்னிப்பானாக. இது ஒரு குறுகிய கால ஆக்கம். எனவே, அச்சுப் பிழை கள் நேர்ந்துவிட்டன! ஆண்டவன் அருளால் அடுத்த பதிப்பில் நிச்சயமாக இத்தன்மை நீக்கப் பட்டு விடும். உரை நடையில் நூல் எழுதுவது எனக்குப் புதிதன்று. ஆனால், ஒரு பெருங்காப்பியத்தை மிக மிகச் சுருக்கி நூலாக்கம் செய்வது என்பது இதுவே முதன் முறை. ஒட்டகத்தை ஊசித் துவாரத்தில் நுழைப்பதிலும் இது கடினமான வேலை; அதிலும் துரிதமான வேலை. வானொலி உரையைக் குறைக்கவோ விரிக்கவோ செய் யாமல் அப்படியே தந்துள்ளேன். இந்நூலை நுணுகி ஆய்ந்து "படித்துத் தமது கருத்துக்களை நுகர்வாளர்கள் எனக்கு அனுப் பித் தருவது பயனுடையது-விரும்புகின்றேன். மீண்டும் கூறுகின்றேன், சீருப்புராணத்திற்குப் பதவுரை, விரிவுரையுடன் கூடிய நூலினை ஆக்கிக்கொண்டுள்ளேன். வெளிக்கொணரும் வல்லமையை. இறைவன் தந்தருள்வானாக! இலக்கிய இன்சுவை நுகர்வாளர்களே, ஆதரவு என்றும் தேவை, முழு அளவில் தேவை! " சென்னை-2 29-12-80. எனக்குத் உங்களின் அன்பன் கவி காமு ஷெரீப்
பக்கம்:சீறாப்புராணச் சொற்பொழிவு.pdf/17
Appearance