உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சீறாப்புராணச் சொற்பொழிவு.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 றைவனின் திருத்தூதர், மகான் முகம்மது நபி அவர் கன்தம் அரிய வரலாற்றினை, இனிய தமிழ்ப் பாக்களில் எடுத் தியம்புவது சீர்தவழ் சீறாப்புராணம். சீறாப் புராணம், பதினேழாம் நூற்குண்டில் தோன்றிய காப்பியம். பதின்மூன்றாம் நூற்றாண்டிலிருந்து பதினாறாம் நூற்றாண்டு முடிய, தமிழில் பெருங் காப்பியம் எது ஒன்றும் தோன்றவில்லை என்பது வரலாறு. பதினேழாம் நூற்ருண்டினையும் இப் பட்டியலில் இணைத்து விடாமல் காப்பாற்றிய பெருமை சீனப் புராணத்திற்கு உண்டு. ஆம்; நான்கு நூற்றாண்டுக் காலமாகத் தேங்கிக் கிடந்த தமிழ் மக்களின் காப்பியப் பசியைத் தணிக்கத் தோன்றிய காப்பியம் சீறாப்புராணம். இதன் பின்னர்ப் பல காப்பியங்கள் தோன்றுவதற்கு வழி காட்டியாக அமைந்த காப்பியமாகவும் சீறாப்புராணத்தைச் சுட்டலாம். ரட்சண்ய யாத்திரிகம், தேம்பாவணி போன்ற செழிப்பு மிகு காப்பியங்களெல்லாம், சீற மலர்ந்த பின் மலர்ந்த மலர்களே யாம்! 'சீறா' என்னும் அரபிச் சொல்லிற்கு வரலாறு என்பது பொருள், நபிகள் நாயகம் அவர்களின் வரலாற்றைச் சுட்டு வதாக மட்டுமே இச்சொல் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. 'சீறத்' என்கின்ற சொல்லைத் தமிழ் மரபிற்கும் ஏற்பச் சீரு என் ருக்கி, அக்கால வழக்கில் இருந்த புராணம் என்ற பதத்தை யும் இணைத்து, "சீறாப்புராணம்" எனப் பெயரிடப்பட்டுள்ளது, புதிாணம் எனும் சொல்லிற்கு, தொன்மையானது எனப்