OU 28 வீரம் பேசி, வெற்றிநடை பயின்று, மிகவேகமாக மக் கமா நகரத்தின் மாபெரும் படையணி மதீனமா நகரின் அண் மையில் வந்து பாடி வீடமைத்துத் தங்கிற்று. அவர்களைப் பொறுத்தவரை இரவு ஊர்ந்து சென்றது. உதய சூரியனை மிக ஆவலுடன் பார்த்திருந்தார்கள். பொழுது புலர்ந்ததும் தானைத் தலைவர்கள் எழுந்து புரவிமீதூர்ந்து, போர்க்களத் தைப் பார்க்கச் சென்றனர். மதீனமா நகரினை அவர்கள் அண் மியபோது, ஒரு புதுமையைக் கண்டு வியந்து நின்றனர். ஆம், அவர்கள் கண்ணெதிரில் ஆழ்ந்த அகன்ற மிக நீண்ட அகழி தென்பட்டது.இவர்கள் நின்ற அகழிக்கரைக்கு எதிர்க்கரை மிக உயர்ந்த மண்மேடாக, எளிதில் கடக்கவியலாத அளவிற்கு உயரமானதாக இருந்தது. அதற்கு அப்பால் தமது தோழர் களுடன் நபிகள் நாயகம் அவர்கள் காட்சி தந்தார்கள். மக் கமா நகரப்படை தாக்கினால் அகழ்க்கரையின் பின்னால் மதீனப் படையினர் மறைந்து கொள்ள வியலும். மதீனப்படை தாக்கி, னால், மக்கமா நகரப் படையினருக்குத் தங்களைத் தற்காத்துக் கொள்ள மறைவான தகுந்த இடமில்லை. மதீனா வாசிகளைத் தாக்குவதாயின் நேரில் தாக்குவதாயின், அகழியிலிறங்க வேண்டும். மதீனப் படை யினர் மேட்டின் மீது நின்று வில்லினாலும் வேலினாலும் தாக்கி னால் இவர்கள் அகழியிலேயே மாண்டுமடிவதைத் தவிர வேறு வழியில்லை. இந்த விசித்திர அகழ் அரண் அமைப்பு, அரபி நாட்டினர் அறிந்திராத தற்காப்பு முறையாகும். பாரசீக தேயத்தவராகிய சல்மான் என்பவர் நபித் தோழர்களில் ஒரு வராகி, நாயகத் திருமேனி அவர்களுடன் மதீனமாநகரில் வாழ்ந்திருந்தார். அவர், பாரசீக தேசத்தில் இது போன்ற மேலும், சென்று
பக்கம்:சீறாப்புராணச் சொற்பொழிவு.pdf/172
Appearance