உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சீறாப்புராணச் சொற்பொழிவு.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

173 தற்காப்பு அமைப்பு உண்டு எனக் கூறியதின் பேரில், இஸ் வகழ் அமைப்புச் செய்யப்பட்டது. எனவே, அதுவரை கண் டும் கேட்டுமிராத அகழ் அரணைக் கண்டதும், மக்கமாநகரத் தலைவர்கள் செய்வதறியாது திகைப்பில் ஆழ்ந்தனர் என்கின் றார் பாவல்ல உமறு. முன்இலாத கவுத்துவம் முற்றுற இன்னநாளில் இயற்றினர் ஈங்குஇதால் பன்னும் மாயமதோஎனப் பாவியர் உன்னி மீண்டுஓர் இடத்தினில் உற்றனர். அகழ் அரணைத் தாண்டிச் சென்று தாக்குவதற்கான மார்க்கம் புலப்படவில்லை. எனவே, இது யார் வகுத்த திட் டமோ? அல்லது மாயமோ என மதிமயங்கியவர்களாக மக்க மாநகரினின்றும் மாவீரம் பேசி வந்த தலைவர்கள் ஓர்புறத்தே. சென்று அமர்ந்து யோசிக்கத் தலைப்பட்டனர். வில்லேர் உழவன் இக்ரிமா, வீரமிக்க குதிரைப் படைத் தளபதி காலித்பின்வலீது, கொலைவெறி படைத்த கத்பான் படையினர், ஊக்கமிகு உயையினா, மொத்தப் படைக்குந் தலை. வனான அபூ சுபியான், ஆகிய அனைவர்தம் அறிவிற்கும் எட்ட வில்லை அகழ் கடந்து சென்று போர்புரியும் மார்க்கம். படை உறங்கின. குதிரைகள் ஓட்டைகள் யாவும் உறங்கின. எண்ணி வந்த எண்ணம் வேறு; நடக்கின்ற நடப்பு வேறான நிலையில் நாட்கள் நடந்து கொண்டிருந்தன. கொண்டு வந்திருந்த. உணவுப் பொருள்கள் குறைந்து கொண்டே வந்தன. குதிரை ஒட்டகைக்குத் தீனிகள் இல்லாத் திண்டாட்டமும் வந்தது. இருபது நாட்கள் முற்றுகையின் மொத்த நாட்கள். இடை யில் நடந்த இரண்டொரு துவந்த யுத்தங்களைத் தவிர்த்தும் புலவர் உமறுக்கும் தமது ஆற்றல் துலங்குமாறு போர்ப் பரணி பாட வாய்பில்லை. எனவே, அவர் போர்க்களத்தே நடந்த யுத்தங்களைப் பாடிக் குறைபோக்குகின்றார். ஆம், துவந்த யுத்.