175 அஞ்சொகுத்தும் தப்பாது கடன்கழிப்பன் நாள்தோறும் அளித்தேற்கு அந்தோ வஞ்சமுறும் குபிரவரால் ஓர்வணக்கம் தாராது வருந்தி நின்றேன் மிஞ்சுகதி வினைப்பயனோ உலகமெங்கும் பெருங்காட்சி விரித்த கோவே தஞ்சமுற உனையடைந்தேன் இத்தகைமை பொறுத்திரக்கம் தாங்கு வாயே! பொல்லாத வஞ்சகரைத் தெளியாத மனத்தவரைப் புன்மை யோரைக் கல்லாத கயவரெனும் குபிரவரை வேகம் அறக் களைந்து நாளும் எல்லாரும் தொழும்அரிய தீனைவளரத் துறுவிசயம் எற்கீந் தாள்வாய் அல்லாவே அல்லாவே என்றிரங்கிப் புகழ்ந்து புகழ்ந்து அறைந்தார் மன்னோ நாயகப் பேரொளி அவர்கள்தம் வாக்காக உள்ள இவ்விரு யாடல்கட்கு இடையே உள்ள அரிய பாடல்களில் சில, விரி வஞ்சி விடப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் நடந்த இம்முற்றுகைப் போல் வந்தோர் படையில் இறந்தோர் மூவர். மதீனத் திருந்தோர்தம்மில் இறந்தோர் அறுவர். இதற்கிடையில், வந்தோரிடையே ஒருவரை ஒருவர் நம்பாநிலை தோன்றி யது. தோன்றச் செய்தான் இறைவன். இவற்றோடு,பெருஞ் சூறைக்காற்ருென்று தோன்றித் துன்பம் விளைவித்தது. ஏறு வாகனங்களாகிய ஒட்டகங்கள், புரவிகள் தீனி இன்றித் திண்டாடின. எனவே, வந்தபோது சேர்ந்து வந்த படையினர் தமக்குள் ஒற்றுமை சிதைந்து தனித்தனியே பிரிந்து செல்லலா யினர். வீரம் சோர்ந்து வீடு திரும்பிய வீணர்களை அவர்தம் இல்லத்தரசிகள் எப்படி வரவேற்றனரோ தெரியவில்லை. மறு பாடவில்லை. பாடி இருந்தால் போர்க்களத்தே ஏதோ
பக்கம்:சீறாப்புராணச் சொற்பொழிவு.pdf/175
Appearance