.176 நடக்க போகிறதென்று எதிர்பார்த்துப் படிக்கின்ற வாசகரின் சோர்வுக்கு மருந்தாக அமைந்திருக்கும். பனிமூட்டம் விலகியது போன்று, வந்த பகை மூட்டம் விலகியதிலே மதீனமா நகர மக்களுக்கு ஒரே மகிழ்ச்சி! 'இனி மக்கமா நகரினர் நம்மீது போர் தொடுக்க மாட் டார்கள்,' என நபிகள் நாயகம் அவர்கள் கணித்துரைத்தார் கள். அது அவ்வாறே ஆயிற்று. மக்கமாநகரினர் அதுவரை பெரிதும் சிறிதுமாக நடத்திய போரின் எண்ணிக்கை இருபத் தெட்டெனக் கணித்துள்ளனர் வரலாற்றாசிரியர்கள். அவை மேலும் எண்ணிக்கையை வளர்த்துக் கொள்ள வியலாதவாறு முடித்தது, முடிந்தது இந்தப் போரேயாம். அதிகமான எண் ணிக்கையினர் வந்து ஏமாந்து திரும்பியதும் இந்த அகழ்ப் போரேயாம். இப்படலத்தை முடிக்கின்ற உமறுப்புலவர், இளையமன்னர்நாள் இருபதும் சின்னமும் இருந்து மனம் உழன்று அகம்வெறுவி ஓடினர்எனும் வாய்மை துளிவின் மாநபிகேட்டு நாயனைத் துதித்தார் ஈளியொடும் சயவாக்கியம் இடந்தோறும் நடந்த என்று பாடி முடிக்கின்றார். 183 பாடல்களைக் கொண்ட பட லம் இந்த உயை வந்த படலம். ஆனால் பத்று, உகதுப் பட லங்களைப் போன்று வீரவிளைவுகள் அதிகம் நிகழாத படலமாகி வெற்றி விளம்பி முடிகின்றது.
பக்கம்:சீறாப்புராணச் சொற்பொழிவு.pdf/176
Appearance