உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சீறாப்புராணச் சொற்பொழிவு.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29 அகழிப் போர் நடந்து முடிந்த அடுத்த ஆண்டில் நபி கள் தாயகம் அவர்கள் மக்கமாநகரம் செல்வதற்குத் திட்ட மீட்டார்கள். போர் புரிந்து மக்கமா நகரினைக் கைப்பற்று வதற்காக அன்று; அங்குள்ள கஃபத்துல்லா எனும் பள்ளிவாச லில் காணிக்கை செலுத்தி, பிரார்த்தனை புரிவதற்காகவேயாம். கஃபத்துல்லாவில் அரபியர்கள் அனைவருக்கும் பிரார்த்தனை நடத்த உரிமையுண்டு. அரபு நாட்டினர் அனைவரும் ஆண் டிற் கொருமுறை அங்கு வந்து கூடுவர். அதற்கு 'ஹஜ்' என்று பெயர். ஹஜ் அல்லாத நாளில் அப் பள்ளிவாசலைத் தரிசிக்கச் செல்வதை 'உம்றா' என்று கூறுவர். உம்றாச் செலுத்தத் தம் தோழர்கள் ஆயிரத்து நானூறு பேர்களுடன், ஓர் தினம் மக்கமாதகர் நோக்கிப் புறப்பட்டார்கள் நபிகள் நாயகம் அவர்கள். தபிகள் நாயகம் அவர்களையோ, அவர் கள்தம் தோழர்களில் யாரையுமோ, நகருக்குள் நுழைய அனு மதிப்பதில்லை என மக்காவாசிகள் முடிவு செய்தனர். வரு வோரை எதிர்த்துப் போர் புரியவும் ஆயத்தமாயினர். எனவே, அனைவரும் போர்க்கருவிகளுடன் மக்கமா நகருக்கு வெளியில் வந்து நபிகள் நாயகம் அவர்களை எதிர்பார்த்திருந்தனர். நபிகள் நாயகம் அவர்கள் புறப்பட்டிருப்பது துல்கஃதா மாதம். இந்த மரதம் அரபியர்கள் போர் புரியத் தகாத மாதம். அப்படியிருந்தும் மக்கமாநகர வாசிகள் போரிடத் தயாராகி அணி வகுத்து நின்றனர். மதீனத்திலிருந்து புறப்பட்டிருந்த நாயகத்திருமேனி அவர்களும் அவர்கள்தம் தோழர்களும் மக்கமா நகரினுக்கு 8.4.-11