178 அண்மையிலுள்ள ஹுதைபியா என்னும் இடத்தில் சென்று தங்கினார்கள். அங்குள்ள கிணறு ஒன்றே ஒன்றுதான், அதில் தண்ணீர் இல்லை. அதை அறிந்த நபிகள் நாயகம் அவர்கள் இறைவனைப் பிரார்த்தித்து, தம்மிடமிருந்த சிறிதளவு தண் ணீரை அக்கிணற்றில் ஊற்றினார்கள். உடனே கிணற்றில் தண்ணீர் பெரும் அளவில் சுரக்கலாயிற்று. இந்த அற்புதத் தைப் பாடுகின்ற உமறுப் புலவர், வழங்குகின்ற வள்ளல் வீட் டில் செல்வம் பெருகியது போன்றும், நபிகள் நாதர் அவர்கள் தம் மனத்தில் அருள் சுரப்பதே போன்றும், தினந்தினம் நாயகத்திருமேனி அவர்களின் சன்மார்க்கம் பெருகுவது போன்றும் கிணற்றில் தண்ணீர் பெருகிற்றெனப் பாடு கின்றார். கொடுக்கும் வள்ளியோர் மனையினில் செறிநிதிக்குவைபோல் வடுப்படாதகன் நெறியுறுதீன் வளர்வதுபோல் அடுக்கும் அன்பருக் குதவிசெய் கபிமனத் தருள்போல் தடுக்கலாத்துறைப் பெருக்கெனப் பெருகின தாங்கல். இப்பாடலின் இறுதியில் உள்ள தாங்கல் என்ற சொல் சிறிய ஏரிகள் போன்ற நீர்நிலைகளைக் குறிக்கின்ற சொல்லாகத் தொண்டைநாட்டுப் பகுதிகளில் இன்றும் நிலைத்திருக்கக் காண் கின்றேம்.தென்மாவட்டங்களில் வழக்கில்இல்லாத சொல் இச் சொல். இலக்கிய வழக்கிலும் பெரும் அளவில் இடம் பெறாச் சொல்லேயாம். இச்சொல்வினைக் கீழக்கரைவாசியான உமறுப் புலவர் தமது பாடலில் தேடி அலைந்து, கண்டு கொணர்ந்து இடம் பெறச் செய்திருப்பதானது, சொற்களைக் கையாண்டு பரப்புவதில் அவர்க்குள்ள ஆர்வத்தைக் காட்டுவதாயுளது. இப்பாடலின் மூலம் உமறுப் புலவர் ஈந்து உவப்போரின் பெருமையைப் பாடுகின்றார். நபிகள் நாதர் அவர்கள் அருள் மணம் உடையவர்கள் என்பதைப் படிப்போருக் குணர்த்துகின் றார். அவர்கள் வளர்க்கின்ற சன்மார்க்கம் நாளுக்குநாள் வளர் கின்றது என்பதைத் தெரிவிக்கின்றார். இவற்றைத் தெரிவிப்ப தின் மூலம், எதிர்த்து நிற்கின்ற மக்கமாநகர வாசிகனை,
பக்கம்:சீறாப்புராணச் சொற்பொழிவு.pdf/178
Appearance