179 . நபிகள் நாயகம் அவர்கள் இந்தத் தடவையும் வெல்லப் போகின்றார்கள், அவர்கள்தரும் அரியமார்க்கம் மேலும் வளரவே போகின்றது என்பதையும் ஊகித்துணரு மாறு உரைத்து விடுகின்றார், வல்ல கவிஞர்கள் கடைப் பிடிக்கின்ற முறை இதுவேயாம். உள்ளுவமம் தொக்கப் பாடுவதே சிறப்புடைய கவிதையாகும். வெளிப்படையாகக் கூறுவதைவிட, மறைமுகமாக உணர்த்துவதே கவிநயமாகும். காதலர்கள் ஒன்றுபட்டார்கள் என்பதை, வெள்ளத்தினோ டொரு வெள்ளமுமாய் நல்ல வீணையும் நாதமும் ஆகிவிட்டார் என்கின்ற பாரதிதாசனார் கூற்று, சுவையுடைய இலக்கியம். கவிஞர் கூறுவதைப் படிப்போர் யூகித்தறிந்து சுவைத்து மகிழ் கின்ற தன்மையில் அமைகின்ற கவிதையை இனிய சொற் சித்திரம் எனக் கூறலாம். உமறுப் புலவரின் இப்பாடல் இத் தகைய உள்உவமம் உடைய உயரிய பாடலேயாம். ஹுதைபியாக் கிணற்றருகே தங்கியுள்ள நபிகள் நாயகம் அவர்களை ஒருவர் வந்து சந்திக்கின்றார். வந்திருப் பதின் நோக்கம் பற்றிக் கேட்கின்றார் அவர். பிரார்த்தனைக் காக வந்திருப்பதாக நபிகள் நாயகம் அவர்கள் கூறுகின்றார் கள். போர் புரிவது தமது நோக்கமன்று எனவும் கூறுகின் றார்கள். இத்தகவலை மக்கமாநகரவாசிகட்கு எடுத்துரைக்கு மாறும் கூறுகின்றார்கள், வந்தவர் மக்கமாநகரில் சென்று தலைவர்களைச் சந்திக்கின்றார், தாம் சொல்வதை ஏற்கும் யக்குவத்தினர் அல்லர் மக்கமாநகரத் தலைவர்கள் என்பதை அவர் அறிந்தேயுள்ளார். அவர்களிடம் தம் கருத்தை விண்டுரைத்திடல் வேண்டும். ஆகவே அவர் "ஒரு தாய், தமது குழந்தையின் உரை அர்த்தமற்றதாகத் தானிருக் கும் என்றறிந்தும் கூட, அதை அவள் கேட்டின்புறுவ துண் டல்லவா? அது போன்றாகிலும் என் உரையைக் கேளுங்க ளேன் என உவமான நயத்துடன் தம் கருத்தினை, எடுத்துரைத் தார் என உமறுப் புலவர் பாடுவது நயமுடையதாகவும், கனி வுடையதாகவும், சொல்வோரின்பால் இரக்கம் தோன்றத் தக்கதாகவும் திகழக் காண்கின்றோம். எனினும்
பக்கம்:சீறாப்புராணச் சொற்பொழிவு.pdf/179
Appearance