180 வந்து,மக்க மாநகம்உறும் காபிர்மா(டு) அனுகிக் கந்தம் நாறும்மெய் முகம்மதைக் கண்டுஅவண் இருந்து சிந்தைகூர்சில செய்திகேட்டு உம்முழை புகுந்தேன். திருந்தயான் சொலும் விண்ணப்பம் செவித்துணைக்கு ஏறாதேனும் வருந்திய மழலைவார்த்தை கேட்டதாய் மகிழ்வ போல்நீர் பொருந்திடக் கேட்பிராயின் நள்குறப் புகல்வேன் என்றார். கேளாமனத்தினரையும் இவற்றைப் படிக்கும் நாம், கேட்க வைப்பதற்கு எம் முறையில் கூற வேண்டும் என உமறுப் புலவர் கற்றுத் தரக் காணுகின்றோம். கவிஞர்களும் புலவர்களும் சமுதாயத்தின் ஆசிரியர்களாவர். அவர்கள், சமுதாயம் மேன்படப் பல அரிய கருத்துக்களைப் போதிப் பவராவார்கள். நாம் அவர்கள்தம் நல்லிலக்கியங்களைக் கற் பதில் ஆர்வம் காட்டுதல் வேண்டும் என்பதனை நினைவில் கொள்ளவைக்கின்றது உமறுப்புலவரின் வ்வரிய நெகிழ்ப்பா. ஹுதைபியா எனும் இடத்தே தங்கி இருக்கின்ற நபிகள் நாயகம் அவர்களை மக்கமாநகரவாசிகளின் சார்பாக மேலும் பலர் வந்து காணுகின்றனர். அவர்கள் அனைவரும் திரும்பிச் சென்று, தாயகத் திருமேனி அவர்களைப் பிரார்த்தனை செலுத்த அனுமதிப்பதே சிறந்த தெனக் கூறுகின்றனர். ஆனால் மக்கமாநகரவாசிகள் ஒப்பவில்லை. முடிவில் இந்த ஆண்டு திரும்பிச் சென்று அடுத்த ஆண்டு வந்து பிரார்த்தனை செலுத் தட்டும் என்கின்றனர். நாயகத் திருமேனி அவர்கள் சம்மதம் தெரிவிக்கின்றார்கள். ஒப்பந்தம் எழுதப் பெறுகின்றது. அதில் தம் தோழர்கள் விரும்பாத நிபந்தனைகள் பலவற்றை நாயகத் திருமேனி அவர்கள் ஏற்றுக் கொள்கின்றார்கள்; ஒப்பந்தம் எழுதி ஏற்கப்படுகின்றது. தங்கி இருந்த இடத்திலேயே தங் களின் காணிக்கைகளை ஈந்து பிரார்த்தனையை முடித்துக் கொண்டு மாநபி அவர்களும் அவர்கள்தம் தோழர்களும்
பக்கம்:சீறாப்புராணச் சொற்பொழிவு.pdf/180
Appearance