25 காட்டுவதாகும். அம்முறையில் இப்பாடலின் இறுதியிலுள்ள 'கருத்தனைப் பொருத்துதல் கருத்தே' எனும் தொடரை-- (கடை விளக்கை) ஏனைய ஒவ்வொரு சொல்லினோடும் இணைத்துப் பார்த்தால், கடவுளை மனத்தில் பெரதித்துக் கொள்ளும் வகையினைக் காணலாம். அதாவது, முதலில் உள்ள 'தீருவினும் திருவாய்' என்பதோடு 'கருத்தனைப் பொருத்து தல் கருத்தே' என்பதையும் இணைத்தால், திருவினும் திரு வாய்க் கருத்தனைப் பொருத்துதல் கருத்தே, என்றதலைக் காணலாம். இவ்வாறே பாடல் முழுவதுமாக நோக்கின், பொருளினும் பொருளாய்க் கருத்தனைப் பொருத்துதல் கருத்தே! தெளிவினும் தெளிவதாய்க் கருத்தனைப் பொருத்து தல் கருத்தே! சிறந்த கருத்தனைப் பொருத்துதல் கருத்தே! அணுவினுக்கணுவாய்க் கருத்தனைப் பொருத்துதல் கருத்தே! மதித்திடாப் பேரொளி அனைத்தும் பொருளினும் பொரு வரக் கருத்தனைப் பொருத்துதல் கருத்தே! வடிவினும் வடிவாய்க் கருத்தனைப் பொருத்துதல் கருத்தேர் பூதலத் துறைந்த பல்லுயிரின் கருவினும் கருவாய்க் கருத்தனைப் பொருத்துதல் கருத்தே! பெருந்தலம் புரந்த கருத்தனைப் பொருத்துதல் கருத்தே எனக் கடவுளை மனிதன் தன் மனத்துள் பொருத்துகின்ற, பொருத்த வேண்டிய பாங்கினையெல்லாம் ஜீனக்குவதாகக் காணலாம். இவற்றிற்கப்பால் இப்பாடலைப் பாயிரமாகக் கொண்டு நோக்கின், கருத்தன் என்னும் இறை வளைத் தம் மனத்திலும் தமிழ்உலகினர் மனத்திலும் புகுத்து வதற்கான வழி நபிகள் நாயகம் அவர்களின் வாழ்க்கையை விளக்கிக் கூறுவதுதான். அந்நோக்குடன்தான் இச் சீறாப் புராணத்தைப் பாடலுற்றேன் என உமறு பாயிரம் கூறுகிறார் என்று கொள்ள இயலும். 'இத்தகு' சிறந்த பாடலை முதல் பாட்டாகக் கொண்டு சீறாப்புராணம் ஆரம்பமாகின்றது. அவையடக்கம் பாடுவது என்பதும் இடைக்காலத் தமிழ்ப் புலவர்களின் வழக்கமாக இருந்து வந்துள்ளதென்பதைக் காண்கிறோம். கம்பன் தனது காப்பியத்தில்,
பக்கம்:சீறாப்புராணச் சொற்பொழிவு.pdf/26
Appearance