உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சீறாப்புராணச் சொற்பொழிவு.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 ஓசை பெற்றுயர் பாற்கடல் உற்றொரு பூசை முற்றவும் நக்குபு புக்கௌ ஆசை பற்றி அறையலுற் றேன்மற்றுக் காசில் கொற்றத் திராமன் கதையரோ என,அவையடக்கம் பாடியுள்ளான். இது போன்றே தத்தம் மனவள வனத்திற்கேற்ப,கற்பனை நயத்தோடு சொற்சுவையும் பொருட்சுவையும் சொட்டப் புலவர்கள் அவையடக்கம் பாடி யுள்ளார்கள். உமறு, இயற்கைக்கு மாறான கற்பனையில் திளைக் காமல், பொருந்தக் கூறுவது எனும் பண்புடன் அவையடக்கம் பாடுகின்றார்: படித்த லத்தெழு கடல்குல கிரிநிலை பதற எடுத்து வீசிய சண்டமா ருதத்திற்கு எதிரே மிடித்து நொந்தசிற் றெறும்புஒரு மூச்சுவிட் டதுபோல் வடித்த செந்தமிழ்ப் புலவர்முன் யான்சொலும் மாறே! இப்பாடலில் தமக்கு முன்தோன்றி, புகழ்மிகு காவியங்கள் பாடிப் போந்துள்ள புலவர்களைக் சண்டமாருதம் என்றால் அவர்கள் முன்னே வருந்தி நொந்து இளைத்த சிற்றெறும்பு மூச்சுவிட்டதற் கொப்பானதே எனது பனுவல் என்று உமறுப் புலவர் அடக்கத்துடன் அவையடக்கம் கூறக் காண்கிறோம். இன்னும் அவருக்கு முன்பு தோன்றித் தமிழ் வளர்த்துப் போத்துள்ள செந்நாப் புலவர்களின் பாடல்களை இடி இடித் திடும் ஆரவாரம் என்றால், என்னுடைய பாடல்களை அல் விடியின் முன்னர், கைவிரல்களை இணைத்து நொடிநொடித்தால் போன்றதே எனவும் அவையடக்கம் கூறுகின்றார் உமறு. படிப டித்தசெஞ் சொற்புல வோர்முனம் பகர்தல் இடிஇ டித்திடும் ஆரவா ரத்தினுக்கு எதிரோர் நொடி நொடிப்பது போலும்ஒத் திருந்ததென்னூலே கடவுள் வாழ்த்துப் பகுதியின் இறுதியில் இவ்வரிய அனைச் யடக்கப் பாடல்களையும் இணைத்துப் பதிப்பித்துள்ளார் பதிப் பாசிரியர்.