உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சீறாப்புராணச் சொற்பொழிவு.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27 கடவுள் வாழ்த்துப் பகுதியில் உள்ள பாடல்கள் அனைத்தும் சந்தத்துடன் பாடி மகிழக் கூடிய ஓசை நயம் உடையவை யாகும். ஆல கால வாரி போலு மாகொ டூர மாகிய கால கேள்வி தான டாத கார ணீக ராளவே தால மீதி லாதி தூதர் சார மேவு வாழ்வினோர் நாலொ டாறு பேர்கள் பாத நாவில் நாளு மோதுவாம் இது ஆரம்ப நாளில் இஸ்லாம் மார்க்கத்தை ஏற்ற பத்துப் பேர்களை வாழ்த்துவது. படிகிடு கிடெனநாக முடிநெறு நெறௌவாரி படுதிரை யன்ற தாகவே வடவரை அசையவான முகடுடை படவறாத மழைமுகில் சிதறி போடவே அடையலர் கொடிகள்கோடி பிடிபடு படலதூளி அலரியி னுடலில் மூழ்கவே நடமிடு கடினவாசி மிசைவரு சமரசூர நரர்புலி அலியை யோதுவாம். இப்பாடலில் நபிகள் நாயகம் அவர்களின் மருகரும் நான் காவது கலிபாவுமாகிய அலி ரலி அவர்கள் புகழ்ந்துரைக்கப் பட்டுள்ளார்கள், கவியால் உரைத்தபுகழ் பெறுவார் மிகுத்தகவி அடைவார் கலக்க மறவே! செவியார மெய்ப்பொருளை அறிவார் மனத்திலுலு செயல்கே டகற்றி விடுவார் புவியார மொய்த்தநெறி மறைநா லிலுக்குமொரு பொறியா யுதித்த வடிவார் நவியாச் சுவர்க்கபதி நயினார் பதத்துனையை நடுகாவில் வைத்த வர்களே!