45 ஆமினா,துக்க மிகுதியால், கதறிப் பதறி, நொந்து வாய் வீட்டு அழுது புலம்பவும், அங்கே வந்து குழுமிய அயல்மனைப் பெண்கள் தேற்றுமொழி பகர்ந்து சூழ்ந்தமர்ந்திருப்பதானது, வலம்புரிச் சங்கினை வெண் சங்குகள் சூழ்ந்திருந்ததை ஒத் திருந்ததென உமறு பாடுகின்றார். இதில் வெளிப்படையாகக் காணப்படுகின்ற இப்பொருளினும் மேன்மையான கற்பனை வளம் மிளிரும் உள் உவமம் ஒன்றும் உண்டு. சங்குகள், ஊதினால் ஒலிப்பன. வலம்புரிச் சங்கு, ஊது வாரின்றியே தானாக இடைவிடாது ஒலித்துக் கொண்டிருப்ப தாகும். துன்பம் சூழப்பட்ட ஆமினா, வலம்புரிச் சங்கு போன்று இடையருது தன்னிலை நினைந்து அழுது கொண்டே இருக்கின் ார்கள். சூழ அமர்ந்துள்ள பெண்களுக்குத் துக்கமின்மை யால் வெற்றுச் சங்கினை யொப்பு வெறுமனே வீற்றிருக்கின் றார்கள். இது உமறு காட்டும் உள் உலமம். பின்னர், தமது மாதுலராகிய அப்துல் முத்தலிப் வந்து வயிற்றிலுள்ள குழந் தையின் மேன்மையைக் கூறவே, தம் மகவின் நலம் கருதி ஆமினா அழுவதை நிறுத்தி ஆறுதல் கொண்டு வாழ்ந்து வரு கின்றார்கள், பேறுகாலம் வருகின்றது. ஊரிலுள்ள பெண்கள் உதவிக்கு வர மறுக்கின்றார்கள். அதற்கு அவர்கள் கூறும் காரணம், மானிட வர்க்கம் சுய நலமுடைய தென்பதைச் சுட்டு வதாக உளது. ஆம், அப்துல் முத்தலிப், தம் மகன் அப்துல்லா விற்கு, இந்த மக்கமா நகரிலே பெண் கொள்ளாமல், மதினம் சென்று ஆமினாவை மருமகளாகக் கொண்டாரல்லவா? அங் கிருந்தே மருமகளின் மருத்துவத்திற்கும் பெண் கொணரட்டும் என்கின்றார்கள் மக்கத்துப்பெண்கள், விதியற்ற நிலையிலே வழி யற்ற மனிதன் ஆண்டவனை நாடுகின்றான் என்பதை மெய்ப் பிப்பான் போன்று, அப்துல் முத்தலிப், கஃபத்துல்லா என்கின்ற இறை இல்லத்தினுள் சென்று, தூயவனே, துணையானவனே என்று துதித்து வேண்டுகின்றார். வான மகளிர்கள் மருத்துவம் பார்க்க, வள்ளல் முகம்மது. பிள்ளை முகம்மதாக, கி.பி. 570. ஆகஸ்ட் மாதம் திங்கட் கிழமை அதிகாலையில் சூரிய உதயத் திற்கு முன்பதாக இவ்வுலகின் கண் அவதரிக்கின்றார்.
பக்கம்:சீறாப்புராணச் சொற்பொழிவு.pdf/46
Appearance