உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சீறாப்புராணச் சொற்பொழிவு.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 இதனை கோதறப் பழுத்து மதுரமே களிந்த கொவ்வைவாய் அரம்பையர் வாழ்த்தித் தீதற நெருங்கி ஏவல்செய் திருப்பச் செழுங்கம லாசனத் திருந்த மாதருக் கரசி ஆமினா உதர மனையிடத் திருந்துமா நிலத்தில் ஆதரம் பெருக நல்வழிப் பொருளாய் அகமது தோன்றின ரன்றே! என அழகுபட, ஆர்வம் துடிக்க, இனிய பாடலாக்கி, படிப் போரை இன்ப வாரிதியில் திளைக்க வைக்கின்றார் உமறுப் புலவர். இப்பாடலில் வள்ளல் நாயகமாகிய, பெருமானார் அவர் களின் பிறப்பின் போது, வானமகளிர் தீதற நெருங்கி நின்று மருத்துவப் பணிகள் புரிந்தனர் என்பதும், அந்த வானமகளிர் தம் எழில் நலமும் உரைக்கப்பட்டுள்ளன. மாதருக்கரசி ஆமினா வயிற்றினின்றும் வள்ளல் நபி அவர்கள் அவதரித் தார்கள் என்று கூறுகின்ற உமறுப்புலவர், முகம்மது தோன் றினர் எனப் பாடாமல், அகமது தோன்றினரன்றே எனப் யாடிப் போந்துள்ளார். இது அறியாமல் நேர்ந்த தவறன்று. அச்சுப் பிழையுமன்று. முகம்மது என்பது வள்ளல் மாநபி அவர்கட்கு இடப்பெற்ற பெயர். ஆனால் ஆமினாத் தாயார் தம் மகனை அன்பொழுக அழைத்த பெயர் அகமது என்பது. தாய்க்கு முதலிடம் அளிக்குமாறு உபதேசித்தவர்கள் வள்ளல் மாநபி அவர்கள். எனவே அவர்கள்தம் பொன் மொழியை நினைவுகூரும் விதமாக ஆமினாத் தாயார் அழைத்த அகமது என்ற பெயரினை முதல் பாட்டில் இட்டு மகிழ்வளிக்கின்றார் உமறுப் புலவர். இதற்கப்பாலுள்ள பாடல்களிலெல்லாம் முகம்மது என்றே பாடியுள்ளமை காண்க. 'ஆதரம் பெருக நல்வழிப் பொருளாய்' என்று உள்ள சொற்கள் நபிகள் நாயகம் அவர்கள் ஆற்றிய பணிகளை, அவர்கள்தம் பண்பை,