உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சீறாப்புராணச் சொற்பொழிவு.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 "கரிப்பினில் சனமெலாம் கலைந்து போதலால்" என்று பஞ்சம் பற்றிய ஒருபாடலை உமறு துவக்குகின்றார். இதில் உள்ள கரிப்பு நான்ற சொல், பஞ்சத்தைச் சுட்டுகின்ற அரிய சொல்லாகும். இலக்கியத்திலே அதிகம் இடம் பெற வாய்ப் பில்லாச் சொல் என்றாலும், இன்றும் தமிழகத்தின் வடக்கு மாவட்டங்களில், கிராமப்புற மக்களிடையே வழக்கில் உள்ள சொல்லாகும் - கரிப்பு-என்பது! கரிந்து போதலை வேர்ச் சொல் லாகக் கொண்டுள்ள விழுமிய சொல் இச்சொல்! கவிஞன் என் போன், நாடு சுற்றி, நாட்டின் கண் வாழுகின்ற மக்களின் பழக்க வழக்கங்களையும், அவர்களிடையே நிலைத்து நிலவுகின்ற சொற்களையும் கண்டறிந்தவனாக இருத்தல் வேண்டும் எனச் சிலப்பதிகாரம் பேசும். அக்கூற்றிற்கு மெய்ச் சான்றாக விளங்கு கின்றார் உமறு என்பதனை இச்சொல் எடுத்தியம்புகின்றது. பிறர் பிள்ளையையெடுத்துப் பாலமுதாட்டி வளர்ப்பதின் மூலம், தங்குடும்பத்தைச் சூழ்ந்துள்ள வறுமையைப் போக்கிக் கொள்ள மக்கமா நகரம் போந்த ஹவிமா, ஆமினாவின் மகனுக்குப் பால்தரும் தாய் தேவை என்றறிந்து அங்குச் செல் கின்றார். சென்று, பிள்ளையைக் கொணருமாறு கேட்கின்றார். ஹலிமா கூற விட்டாலும், ஹலிமாவின் தோற்றத்தைக் கண்டு நிலைமையை உணர்ந்த ஆமினாத்தாயார், பிள்ளையை ஏற்குமுன் அப்பிள்ளையின் குடும்ப நிலையினைத் தெரிந்து கொள்ளுங்கள் எனக் கூறுகின்றதாக ஒரு பாடல் 2 உற்ற தந்தையும் இல்லைஉறு பொருளில்லை எத்தீம் பெற்ற பிள்ளைஓர் உதவிசெய் குவர்பிற விலைநீர் பற்று நற்பொருள் குறித்துவந் தவர்பசி யுடையீர் இற்றைக்கு உண்பதற்கு இடமிலை என்னிடத் தென்றார். உதண்களில் சிறந்தது உணவளித்தல் என்று உணர்த்தி, தம்மைப் பின்பற்றுவோரை உணவளிக்கும் உயர் அறம் புரிய மாறு பணித்தவர்கள் வள்ளல் மாநபி அவர்கள். தாம் பட்டினி