உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சீறாப்புராணச் சொற்பொழிவு.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51 இருக்கின்ற நிலையிலும், தம்மிடம் வந்தோருக்கு, இல்லை எனாது வழங்கியவர்கள் மாநபி அவர்கள். பசித்திருப்போர் பார்த் திருக்க உண்ணுவது பாவம் என்று கூறியவர்கள் நாயகத் திருமேனி அவர்கள். பட்டினியால் வாடி நொந்தழுகின்ற பஞ்சை பராரிகளே முதலில் சொர்க்கம் புகுவார் எனப் புகன்ற புண்ணிய மாநபி பிறந்துள்ள வீட்டிலே, பெற்றெடுத்த தாய் கூறுகிறார், இன்றைக்கு உண்பதற்கு இல்லை என்று. ஆமி னாத் தாயாரின் தன்னிலை விளக்கமாக உள்ள இப்பாடல் வர லாறு புரிந்து படிப்போரின் கண்களைக் குளமாக்க வல்லது. ஆமினாத் தாயாரின் விளக்கத்தைக் கேட்ட பின்னரும், குழந்தையைக் கொண்டு வருமாறு கேட்டு வாங்கிப் பாலமு தூட்டுகிறார் ஹலிமா. பின்னர், பிள்ளையின் பொலிவையும், ஒளிவையும்,உயர்வையும் உணர்ந்த ஹலிமாவும் அவர்தம் கணவரான ஆரிதும் எவ்வித நிபந்தனையுமின்றிப் பிள்ளையை எடுத்துக் கொண்டு தம்மூர் செல்கின்றார்கள். மழை பொழிந்து செழிக்கின்றது குனைன்! பிள்ளை முகம்மது பாலமுதம் உண்டு பசியறியா நிலையில் வளர்கின்றார்கள்! நபிகள் நாயகம் அவர்கள் நடந்தார்கள், உரை புகன்னர் கள், வளர்ந்தார்கள் என்றெல்லாம் உமறுப் புலவர் பாடி யுள்ள அழகிய சொற்சித்திரத்தைக் கண்ணுறுவோர், இது என்ன பிள்ளைத்தமிழ்போல் இருக்கின்றதே! உமறு சீருப்புரா ணக் காவியம் தானே பாடினார்? அதனுள் பிள்ளைத்தமிழ்ப் பாக்கள் எப்படி முளைத்தன என்று ஐயுறுகின்றனர். பிள்ளையைப் பற்றிய பாடல் பிள்ளைத்தமிழ்ப் பாடலாக அமைவதில் வியப் பென்னவோ? வண்டோதரி போர்க்களத்தே மாண்டு கிடக் கின்ற தன் கணவன் ராவணனைக் கண்டு அழுது புலம்புகின்ற பாடலைப் படிப்போர், ஈதென்ன ஒப்பாரி போன்றிருக்கிறதே என்று கேட்பதையொத்த கேள்வியே இதுவும், அழுது புலம்பு வது, ஒப்பாரி போன்றல்லாது, வேறு எவ்வாறிருக்கும்? கவி ஞன், தான் எதை விளக்க நினைக்கின்றானோ, அது அதுவாகவே அமையும் போதுதான் வெற்றி பெற்றவனாகின்றான். பிள்ளை