உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சீறாப்புராணச் சொற்பொழிவு.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55 படுகின்றன. காக்கை, கழுகு, கொக்குக் குருவிகள் குடிக்கப் பயன்படுகின்றது. குளத்தில் உள்ள மீன் தவளைகள் போன்ற உயிரினங்கள் வாழப்பயன்படுகின்றது,இன்னும், அக்குளத்தில் முளைத்து, செழித்து வளருகின்ற தாமரை, அல்லி, புல் பூண் டாகிய அனைத்திற்கும் அது பயனாகின்றது. ஆனால்,நீரினைச் சுமந்து திகழ்கின்ற குளத்திற்கு அத்தண்ணீர் துளியும் பயன் படுவதில்லை. இது போன்ற தன்மையிலே அபுல்காசிம் படைத்த செல்வம் பயன்பட்டது என்று கூறுகின்றார் உமறுப் புலவர். கடகரி எனுமபுல் காசிம் செல்வம் போல் இட றைப் பெருகியங் கிருந்த வாவியே செல்வம் சேருங்கால், செல்வர்கள் தம் செல்வவளத்தைச் செலவிட வேண்டிய விதம் பற்றி விளக்குவது இப்பாடல். வெறும் அறவுரையினை வெறுப்போருண்டு; கவிதை என்கின்ற தேனுள் பொதித்திருப்பதால் கஞ்சமனத்தினரும் படித்துக் களி உவகை கொள்ள முடியும். இதுதான் பாட டலுக்கு உள்ள சிறப்பு. நபிகள் நாயகம் அவர்கள் நீந்திக் குளித்துக் களிக்கக் குளத்தில் இறங்குகின்றார்கள். குளத்தின் நீர், சிறுசிறு அலை களாகி, நாயகத் திருமேனி அவர்களின் எதிரில் செல்லத் தலைப் படுகின்றது. கவிஞர் உமறு இக்காட்சியைக் கற்பனைக் கண் கொண்டு காணுகின்றார். கவிதை உதயம் ஆகின்றது. நிறை தடம் அசைதலால், நிகரி லாமுதல் இறையவன் தூதர்நம் இடத்தில் மூழ்குறக் குறைபடா அரியமெய் குளிரு மோவென கறைபுனல் கலங்கியுள் நடுங்கல் போன்றதே! தூதுவரான இப்பாடலின் பொருள், ஆண்டவனின் முகம்மது நபி அவர்கள் நம்முள் இறங்கிக் குளிக்க வருகின்றார் களே, அவர்கள்தம் உடலை நம்முடைய பெருக்கம் குளிரீந்து வருந்துமாறு செய்துவிடுமோ என எண்ணி, அக்குளத்து நீர்