56. அஞ்சி நடுங்குவ போன்றிருந்ததாம். கவிஞர்களின் கண்கள் எவ்வளவு கூர்மையுடையனவாயிருக்கின்றன? அவர்களின் நெஞ்சங்களிலிருந்து பிறக்கின்ற கற்பனைகள் படிப்போருக்கு எவ்வளவு மகிழ்வை அளிக்கின்றன? பெரியவர்களிடம் நாம் எவ்வளவு அச்சமும், மரியாதையும் உடையவர்களாகத் திகழ வேண்டும் என்கின்ற பாடத்தை இப்பாடல் போதிக்கின்றது. வெறும் போதனையன்று. கவிதை மனம் கமழுகின்ற இனிய போதனை. நீரில் எழும் அலையை, பெரியோர் பால் காட்டு கின்ற, காட்டவேண்டிய அச்சம் என, மரியாதை எனப் புனைந் துரை செய்கின்ற கற்பனை, உமறு தந்துள்ள இப்பாடலாகத் தான் இருக்க முடியும். தமிழில் மட்டுமன்றி, வேறு எம் மொழியினும் இது போன்ற கற்பனை இராதென்றே கூறலாம். I இஸ்லாமியப் புலவர்கட்கு, இயற்கையைக் கண்டால் ஒரே ஆனந்தம்! காரணம், மற்றெதையும் கற்பனையாகவோ, கற்பனைகலந்தோ பாடுகின்ற வாய்ப்பு இஸ்லாமியப்புலவர்க்கு அடியோடு இல்லை. உள்ளதை உள்ளவாறே பாடவேண்டும். பெண்களையோ, ஆண்களையோ அங்க வருணனை செய்ய அனு மதியில்லை. எனவே, இயற்கையின் பால் வரும்போது, ஆனந்தப் பேரருந்தலுக்காளாகி விடுகின்றார்கள். ஆகவே இஸ்லாமியப் புலவர்களிடையே. இயற்கையை வருணிக்கின்ற, திறம் சற்றே கூடுதல எனலாம். குளத்தில் பிள்ளைகள் இறங்கிக் குளித்து, நீந்திக் களித்து விளையாடும் போது, தண்ணீர் கரைகளில் மோதுவதால் நீர்த் திவலைகள் தெறித்துச் சிதறுகின்றன. இக்காட்சியைப்பாட் டாக்கிக் காட்டுகின்ற உமறுப்புலவர், நபிகள் நாயகம் அவர்கள், தன்பால் குளிப்பதிலே எழுந்த மகிழ்ச்சிப்பெருக்கால் குளத்துநீர் அப்படித் துள்ளிக் குதிக்கின்றதென்கின்றார். தங்கிய புளவிடை குளிப்பத் தத்துநீர் எங்ஙணும் கரைதவழ்ந்து இழிந்து தோன்றுவ கங்கை தள் உள்ளகம் களிப்புற்று ஆனந்தம் பொங்கியே உடல்புறம் பொசிவ போன்றதே!
பக்கம்:சீறாப்புராணச் சொற்பொழிவு.pdf/57
Appearance